இன்றைய ராசிபலன் 18-06-2018

மேஷம்: புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். அரசாங்கக் காரியம் முடிவதில் தாமதம் உண்டாகும். மாலையில் வாழ்க்கைத்துணையின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். தந்தை வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும், சக பணியாளர்கள் உதவி செய்வார்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போலவே இருக்கும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாயின் விருப்பத்தை நிறைவேற்றி மகிழும் வாய்ப்பு கிடைக்கும்.
ரிஷபம்: மகிழ்ச்சியான நாளாக அமையும். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். தாயின் தேவையைப் பூர்த்தி செய்வீர்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் உற்சாகமான நிலையே காணப்படும். எதிர்பார்த்த சலுகை கிடைக்கக்கூடும். வியாபாரத்தில் பணியாளர்களின் ஒத்துழைப்பால் கூடுதல் லாபம் கிடைக்கும். பங்குதாரர்களால் ஆதாயம் கிடைக்கக்கூடும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் ஆதாயம் உண்டாகும்.
மிதுனம்: அரசாங்கக் காரியங்களில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்ட சிறுசிறு பிணக்குகள் மறைந்து, அந்நியோன்யம் அதிகரிக்கும். புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் தொடங்குவது நல்லது. அலுவலகத்தில் கூடுதல் பொறுப்பு உங்களுக்கு வந்து சேரும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும். பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்புத் தருவார்கள். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும்.
கடகம்: எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவேண்டிய நாள். தந்தையின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள். முக்கிய முடிவுகளை ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து எடுப்பது நல்லது. அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். உங்கள் பணிகளை மற்றவர்களிடம் ஒப்படைக்காமல் நீங்களே செய்வது அவசியம். வியாபாரத்தில் பணியாளர்களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்கவும். விற்பனை வழக்கம்போலவே இருக்கும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.
சிம்மம்: காலையில் வழக்கமான பணிகளில் மட்டுமே ஈடுபடவும். புதிய முயற்சிகளைப் பிற்பகலுக்கு மேல் தொடங்குவது சாதகமாக முடியும். தாய்வழி உறவுகளுக்காக செலவு செய்யவேண்டி வரும். அலுவலகத்தில் பணி நெருக்கடி குறையும் என்பதால் உற்சாகமாகக் காணப்படுவீர்கள். வியாபாரத்தில் சில சங்கடங்களைச் சமாளிக்கவேண்டி வரும். பணியாளர்களிடம் போதுமான ஒத்துழைப்பு கிடைக்காது. பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ஆலயங்களை தரிசித்து வழிபடும் வாய்ப்பு ஏற்படும்.
கன்னி: வாழ்க்கைத்துணை வழியில் செலவுகள் ஏற்படும். போதுமான பணம் இருப்பதால் சமாளித்து விடுவீர்கள். மாலையில் வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக அமையும். நேரத்துக்குச் சாப்பிடமுடியாதபடி அலுவலகத்தில் பணிச்சுமை இருந்தாலும் சமாளித்து விடுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதற்குச் சற்று கூடுதலாக உழைக்கவேண்டி இருக்கும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் ஆதாயம் கிடைக்க வாய்ப்பு உண்டு.
துலாம்: அதிர்ஷ்டகரமான நாள். இன்று நீங்கள் எடுக்கும் புதிய முயற்சி வெற்றிகரமாக முடியும். உங்களுடைய முயற்சிக்கு வாழ்க்கைத்துணை ஆதரவாக இருப்பார். வாழ்க்கைத்துணை வழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பிற்பகலுக்கு மேல் தொலைதூரப் பயணங்களைத் தவிர்க்கவும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி ஏற்படக்கூடும்.
விருச்சிகம்: தந்தை வழி உறவுகளிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தந்தையின் தேவையை நிறைவேற்றுவீர்கள். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். சகோதரர்களால் ஓரளவுக்கு நன்மை ஏற்படும். அலுவலகத்தில் உங்கள் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. வியாபாரத்தில் பணியாளர்களால் சிறு சிறு பிரச்னைகளைச் சந்திக்கவேண்டி இருக்கும். பங்குதாரர்களிடம் அனுசரணையாக நடந்துகொள்ளவும். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் செலவுகள் ஏற்படும்.
தனுசு: இன்று எதிலும் சற்று பொறுமையுடன் செயல்படவேண்டிய நாள். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதை இன்று தவிர்ப்பது நல்லது. மாலையில் குடும்பத்துடன் கோயில்களுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும். அலுவலகத்தில் மற்றவர்களின் வேலையையும் சேர்த்துச் செய்யவேண்டி இருந்தாலும், உற்சாகமாகச் செயல்படுவீர்கள். வியாபாரத்தில் சற்று கூடுதலாக உழைக்கவேண்டி இருக்கும். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.
மகரம்: உற்சாகமான நாள். தாய்வழி உறவுகளால் செலவுகள் ஏற்படக்கூடும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். பிற்பகலுக்கு மேல் உறவினர்கள் வருகையால் வீட்டில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். ஆனால், சக ஊழியர்கள் உங்கள் பணிகளில் உதவி செய்வது ஆறுதலாக இருக்கும். வியாபாரத்தில் விற்பனை வழக்கம் போலவே காணப்படும். பணியாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற முயற்சி செய்வீர்கள். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் செலவுகள் ஏற்படக்கூடும்.
கும்பம்: சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும் தேவையான பணம் இருப்பதால் சமாளித்துவிடுவீர்கள். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். மாலையில் உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். உங்களின் யோசனை அதிகாரிகளால் பாராட்டப்படும். சலுகைகள் கிடைப்பதற்கும் வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி ஏற்படும்.
மீனம்: எதிர்பாராத பணவரவுடன், திடீர் செலவுகளும் ஏற்படும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். நண்பர்கள் கேட்கும் உதவியை மகிழ்ச்சியுடன் செய்து தருவீர்கள். மாலையில் உறவினர் அல்லது நண்பர் வீட்டுக்குச் செல்லும் வாய்ப்பும் அதனால் மனதில் உற்சாகமும் ஏற்படும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். வியாபாரத்தில் பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்புத் தருவார்கள். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.