நுரையீரலைத் தாக்கி வெளியேறிய ரவை -மல்லாகம் துப்பாக்கிச் சூடு!!

மல்­லா­கம் சகா­ய­மாதா ஆல­யத் தின் முன்­பாக சுன்­னா­கம் பொலி­ ஸார் நேற்­று­முன்­னி­ரவு நடத்­திய துப்­பாக்­கிச் சூட்­டில் இளை­ஞர் படு­கொ­லை­செய்­யப்­பட்­டார். ஆல­யத் திரு­வி­ழா­வுக்கு ஒன்­று­ கூ­டிய பக்­தர்­கள் இந்­தச் சம்­ப வத்­தால் அதிர்ச்­சி­யில் உறைந்த­னர்.

பொலி­ஸார் துப்பாக்­கிச் சூடு நடத்­தி­ய­மை­யால் கொதித்­தெ­ழுந்த இளை­ஞர்­ கள், பொது­மக்­கள் ஒன்­று­தி ரண்டு காங்­கே­சன்­துறை வீதி யில் மறி­யல் போராட்­டத்­தில் குதித்­த­னர். பொலி­ஸா­ருக்­கும், போராட்­டத்­தில் குதித்­தோ­ ருக்­கும் இடை­யில் மோதல் ஏற்­ப­டும் நிலமை தோன்­றி­ய தால் அந்­தப் பகு­தி­யில் பதற்­றம் நீடித்­தது. சிறப்பு அதி­ர­டிப் படை­யி­னர், பொலிஸ் கல­க­ம டக்­கும் பிரிவு என்­ப­ன­வும் குவிக் கப்­பட்­ட­தால் பதற்­றம் மேலும் அதி­க­ரித்­தது.

அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன வடக்­குக்கு இன்று பய­ணம் மேற்­கொள்­ள­வுள்ள நிலை­யில் இந்­தச் சம்­ப­வம் இடம்­பெற்­றுள்­ளது. மல்­லா­கம் குள­மங்­கால் பகு­தி யைச் சேர்ந்த மேசன் தொழி­லா­ளி­யான பாக்­கி­ய­ராஜா சுதர்­சன் (வயது-34) என்ற இளை­ஞனே துப்­பாக்­கிச் சூட்­டில் உயி­ரி­ழந்­த­வ­ரா­வார். இரண்டு சகோ­த­ரி­க­ளு­ட­னும், நோய்­வாய்ப்­பட்­டுள்ள தந்­தை­யு­ட­னுமே இவர் வசித்து வரு­வ­தாக உற­வி­னர்­கள் தெரி­வித்­த­னர்.

சம்­ப­வத்தை நேரில் கண்­ட­வர்­கள் ஊட­கங்­க­ளுக்கு தெரி­வித்­த­தா­வது,
மல்­லா­கம் சகா­ய­மாதா ஆல­யத்­தின் திரு­விழா நேற்று மாலை இடம்­பெற்­றது. மாலை 6.45 மணி­ய­ள­வில், சுன்­னா­கத்­தி­லி­ருந்து சுமார் 6 தொடக்­கம் 8 உந்­து­ரு­ளி­க­ளில் வாள்­க­ளு­டன் இளை­ஞர்­கள் வந்­துள்­ள­னர். அவர்­கள் ஒரு­வ­ரைத் துரத்தி வந்­துள்­ள­னர். வாள்­க­ளு­டன் இளை­ஞர்­க­ளால் துரத்­தப்­பட்­ட­வர், ஆல­யத் திரு­வி­ழாக் கூட்­டத்­தி­னுள் புகுந்­துள்­ளார்.

வாள்­க­ளு­டன் உந்­து­ரு­ளி­யில் வந்த இளை­ஞர்­கள் ஆல­யத்­தின் முன்­பாக நின்­றி­ருந்­த­னர். ஆல­யத் திரு­வி­ழா­வில் பங்­கேற்ற இளை­ஞர் ஒரு­வர் வீதிக்கு வந்­துள்­ளார். வீதி­யில் வாள்­க­ளு­டன் நின்­றி­ருந்த இளை­ஞர்­கள், அவர் மீது தாக்­கு­தல் நடத்­தி­யுள்­ள­னர்.

இதன்­போது, ஆல­யத் திரு­வி­ழா­வுக்கு வந்­தி­ருந்த, பாக்­கி­ய­ராஜா சுதர்­சன், வாள்­க­ளு­டன் நின்­றி­ருந்த இளை­ஞர்­க­ளின் தாக்­கு­த­லி­ருந்து தனது உற­வு­முறை இளை­ஞ­னைக் காப்­பாற்ற முயற்­சித்­துள்­ளார்.
அந்த நேரத்­தில், முச்­சக்­கர வண்­டி­யில் சுன்­னா­கம் பொலி­ஸார் பய­ணித்­துள்­ள­னர். அவர்­கள் ஏழா­லை­யில் நடந்த திடீர் உயி­ரி­ழப்பு தொடர்­பாக விசா­ரிக்­கவே அந்­தப் பகு­திக்கு வந்­தி­ருந்­த­னர்.

இந்­தச் சம்­ப­வத்­தை­ய­டுத்து, முச்­சக்­க­ர­வண்­டி­யி­லி­ருந்து இறங்­கிய பொலிஸ் கான்ஸ்­ட­பிள், அடி­வாங்­கிக் கொண்­டி­ருந்த இளை­ஞனை நோக்கி துப்­பா­கி­யால் சுட­முற்­பட்­டுள்­ளார். பாக்­கி­ய­ராஜா சுதர்­சன் அடி­வாங்­கிக் கொண்­டி­ருந்த இளை­ஞனை காப்­பாற்ற முயற்­சித்­துள்­ளார். இதன்­போது பொலி­ஸா­ரின் துப்­பாக்­கிச் சூட்­டுக்கு இலக்­கா­கிய சுதர்­சன் சம்­பவ இடத்­தில் அவ­லக் குரல் எழுப்­பி­ய­வாறு உயி­ரி­ழந்­துள்­ளார்.

இத­னை­ய­டுத்து வாள்­க­ளு­டன் வந்த இளை­ஞர் கும்­பல் அங்­கி­ருந்து தப்­பி­யோ­டி­யுள்­ளது. முச்­சக்­க­ர­வண்­டி­யில் வந்த மற்­றைய பொலி­ஸா­ரும் அங்­கி­ருந்து சென்­றுள்­ளார். துப்­பாக்­கி­யால் சூடு நடத்­தி­யத பொலி­ஸாரை சிறிது நேரத்­தில் அங்கு சிவில் உடை­யில் வந்த ஒரு­வர் உந்­து­ரு­ளி­யில் ஏற்­றிச் சென்­றுள்­ளார்.

பொலி­ஸா­ரின் துப்­பாக்­கிச்­சூட்­டை­ய­டுத்து கொதித்­தெ­ழுந்த இளை­ஞர்­கள் காங்­கே­சன்­துறை வீதியை மறித்­துப் போராட்­டத்­தில் ஈடு­பட்­ட­தால் பெரும் பதற்­ற­மான சூழல் ஏற்­பட்­டது. உயி­ரி­ழந்த இளை­ஞ­னின் சட­லம், தெல்­லிப்­பழை வைத்­தி­ய­சா­லை­யில் கொண்டு செல்­லப்­பட்­டுள்­ளது. மல்­லா­கம் மாவட்ட நீதி­பதி அ.ஜூட்­சன், சம்­பவ இடத்­தைச் சென்று பார்­வை­யிட்­ட­து­டன், வைத்­தி­ய­சா­லைக்­குச் சென்று சட­லத்­தை­யும் பார்­வை­யிட்­டார்.

மருத்­து­வ­மனை தக­வல்

உயி­ரி­ழந்த சுதர்­ச­னின் முன்­பக்க வலது இடுப்­பி­னூ­டாக உள்­நு­ழைந்த துப்­பாக்கி ரவை, அவ­ரது நுரை­யீ­ர­லில் அடிப் பகு­தி­யைத் தாக்­கி­ய­வாறு வெளி­யே­றி­யுள்­ளது. சுதர்­ச­னின் உடல் உடற்­கூற்­றுப் பரி­சோ­த­னைக்­காக யாழ்ப்­பா­ணம் போதனா வைத்­தி­ய­சா­லைக்கு நேற்று அனுப்­பி­வைக்­கப்­பட்­டுள்­ளது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like