வவுனியாவில் வைத்தியர் யுவதிக்கு தொடர் பாலியல் துன்புறுத்தல்!

வவுனியாவில் பாலியல் துன்புறுத்தல் செய்த வைத்தியரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை

வவுனியா நெளுக்குளம் பகுதியில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் தனக்கு பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்ந்து இடம்பெற்றதாக நேற்று (18.06) இரவு வவுனியா பொலிஸ் நிலையத்தில் 22 வயதுடைய யுவதியொருவர் மேற்கொண்ட முறைப்பாட்டினையடுத்து அவரை கைது செய்வதற்குரிய நடவடிக்கையினை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வவுனியாவில் உள்ள ஆய்வுகூடமொன்றில் பணிபுரியும் யுவதியொருவர் நெளுக்குளம் பகுதியில் அமைந்துள்ள குறித்த தனியார் மருத்துவமனைக்கு தினசரி நோயாளிகளின் மருத்துவ அறிக்கைகளை கொண்டு சென்று வழங்குவது வழமை இந்த சந்தர்ப்பங்களிலேயே இந்த யுவதி மீது பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் இடம்பெற்றுள்ளன என்றும்

அதே போன்று கடந்த வெள்ளிக்கிழமை மாலை மருத்துவ அறிக்கைகளை எடுத்து சென்ற போதும் பாலியல் துன்புறுத்தல் அதிகமாக இருந்தமையினால் மிகுந்த பாதிப்புக்குள்ளான யுவதி வீட்டில் விடயத்தை கூறவேண்டாம் என்றும் கூறினால் தொடர்ந்து பணியில் இருக்க முடியாது என வைத்தியர் அச்சுறுத்தியதினால் வீட்டாருக்கு தெரிவிக்காமல் மறைத்துள்ளார்

இதனைத்தொடர்ந்து யுவதியின் நடவடிக்கையில் சந்தேகம் கொண்ட வீட்டார் வினாவியபோது யுவதி நடந்தவற்றை கூறியுள்ளார்

அதையடுத்து இரவு 10.00 மணியளவில் பெற்றோர் அப்பெண்ணை அழைத்து சென்று வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றினை மேற்கொண்டனர்.

பாலியல் தொந்தரவுக்குள்ளாகிய பெண் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த வைத்தியரை கைது செய்வதற்குரிய நடவடிக்கையினை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை வைத்தியர் பகுதியில் இதனை முற்றாக மறுப்பதுடன் குறித்த யுவதி பணிக்கு வரும் போது எந்நேரமும் கையடக்க தொலைபேசியில் முடங்கி இருப்பதாகவும் அதனால் பணிகளை சீராக செய்வதில்லை எனவும் இது தொடர்ந்தமையால் குறித்த தினத்தன்று யுவதியின் தொலைபேசியை பறித்து கடிணமாக கண்டித்ததாகவும் இதனாலேயே யுவதி தன் மீது அவதூறு பரப்புவதற்காகவே பொய்யான குற்றச்சாட்டை முன்வைக்கிரார் என கூறுகின்றனர்

எனினும் குறித்த யுவதியின் கையடக்க தொலைபேசிக்கு வைத்தியர் மன்னிப்புகோரியும் இந்த தவறு இனிமேல் நடைபெறாது எனவும் இறுதி நாள் அன்று குறுந்தகவல் அனுப்பியுள்ளார் இதேவேளை ஆரம்ப நாட்களில் உன்னை பணியிலிருந்து நிறுத்துவேன் என்னால் முடியும் என்று அச்சுறுத்தும் வகையிலும் குறுந்தகவல் அனுப்பியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது ஏதுவாகினும் விசாரணைகளின் பின் உண்மை வெளிச்சத்திற்கு வரும் என்பதில் ஐயமில்லை