யாழில் புதிய வகை தாக்குதல் (படங்கள்)

யாழில் புதிய வகை தாக்குதல் முறைமையான கழிவோயில் தாக்குதல் இன்று (19) பொது மக்கள் மீதும் வெற்றிகரமாக நடாத்தப்பட்டுள்ளது . இது ஒரு வார காலத்துக்குள் நாடத்தப்பட்ட மூன்றாவது தாக்குதலாகும்.

தெல்லிப்பளை துர்க்ககை அம்மன் ஆலயமுன்றலில் நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு விட்டு பஸ்ஸில் வீடு திரும்பிசென்ற கொண்டிருந்த மக்கள் மீது புன்னாலைக்கட்டுவன் சந்திக்கு சமீபமாக இனம்தெரியாதவர்களால் (?) இத் தாக்குதல் நாடாத்தப்பட்டுள்ளது 3 மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் முதலில் பஸ்சின் மீது கல்லினை வீசி தாக்கிவிட்டு பின்னர் பஸ்ஸில் இருந்தவர்கள் மீது கழிவோயில்களை வீசியுள்ளார்கள்.

இன்று (19 ) துர்க்கை அம்மன் ஆலயத்துக்கு முன்பாக 22 வருடங்களாக இடம்பெயர்ந்து வாழும் வலிகாமம் வடக்கு மக்கள் தம்மை ஒரு மாதகாலத்துக்குள் சொந்த இடங்களில் குடியமர்த்தக்கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நாடாத்தியிருந்தனர்.

ஆலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட பூஜை வழிபாட்டினை தொடர்ந்து ஆலயத்தில் இருந்து 100 மீற்றர் தூரத்தில் உள்ள வலி .வடக்கு பிரதேச செயலகத்துக்கு ஊர்வலமாக சென்று பிரதேச செயலரிடம் மகஜர் கையளிக்க மக்கள் சென்றனர் . ஊர்வலம் செல்ல அனுமதியில்லை எனக்கோரி மக்களை தடுத்து நிறுத்திய பொலிஸார் பிரதிநிதிகள் மட்டும் சென்று மகஜரை கையளிக்க அனுமதித்தனர்.

இதனால் பிரதேச செயலகத்துக்கு நாடாளமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா ,வலி .வடக்கு பிரதேச சபை தலைவர் சுகிர்தன் உட்பட ஒரு சிலரே மகஜரை செயலாளரிடம் கையளித்தனர்

 

 

 

 

 

Get real time updates directly on you device, subscribe now.

You might also like