அனுஷ்காவுடன் பிரபாஸ்க்கு திருமணமா? முதன்முறையாக பிரபாஸின் பரபரப்பு பதில்!

அனுஷ்காவுக்கு 36 வயது ஆகிறது. 2005-ல் சினிமாவுக்கு வந்த அவர் தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தார். பெரிய ஹீரோக்களுடனும் ஜோடி சேர்ந்தார். கடைசியாக வந்த பாகுமதி படத்துக்கு பிறகு புதிய படங்கள் அவருக்கு இல்லை. வயதானதால் டைரக்டர்கள் ஒதுக்குவதாகவும் இளம் கதாநாயகர்கள் ஜோடி சேர மறுப்பதாகவும் கூறுகின்றனர்.

இதனால் அவருக்கு விரைவில் திருமணத்தை முடிக்க பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்ப்பதாக கூறப்பட்டது. மேலும் ஏற்கனவே நடிகர் பிரபாஸ் மற்றும் அனுஷ்கா காதலித்து வந்ததாக கிசுகிசுக்க்கப்பட்ட நிலையில், இருவரும் இணைத்து பாகுபலி படத்தில் நடித்து அனைவரும் அறிந்தது தான்.

படம் திரைக்கு வந்த பிறகு திருமணம் செய்து கொள்ள இருவரும் தயாராகி விட்டதாக கூறப்பட்டது. அனுஷ்கா கோவில்களுக்கு சென்று பூஜை, வழிபாடுகள் செய்து வருகிறார்.

இந்த நிலையில் திருமணம் பற்றிய செய்திக்கு அனுஷ்கா சமீபத்தில் விளக்கம் அளித்தார். நானும் பிரபாசும் பாகுபலியில் ஜோடியாக நடித்தோம். திரைக்கு வெளியே நண்பர்களாகத்தான் பழகி வருகிறோம். வேறு எதுவும் இல்லை.” என்றார்.
இதைதொடர்ந்து தற்போது முதல் முறையாக அனுஷ்கா பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்கு நடிகர் பிரபாஸ் பதிலளித்துள்ளார்.

பிரபாசும் தற்போது காதல் கிசுகிசுவுக்கு பதில் அளித்துள்ளார். “என்னையும் அனுஷ்காவையும் இணைத்து பேசி வருகின்றனர். எங்களுக்கு திருமணம் நடக்க இருப்பதாகவும் கூறுகிறார்கள். எனது சொந்த வாழ்க்கை பற்றி வெளிப்படையாக பேச விரும்பவில்லை. எனக்கு திருமணம் நடக்கும்போது அதை வெளிப்படையாக அறிவிப்பேன். என்று கூறியுள்ளார்

Get real time updates directly on you device, subscribe now.

You might also like