விபத்தில் காதலன் உயிரிழப்பு- இறந்தது தெரியாமல் கடிதம் எழுதிய காதலி- இறுதிச் சடங்கில் பெரும் சோகம்!!

கொழும்பு புறநகர் பகுதியில் ஏற்பட்ட கோர விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதியான இளைஞன் பரிதாபமாக உயிரிழந்தார்.

கடவத்தை அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயில் வீதி சமிக்ஞையை அவதானிக்காமல் பயணித்த மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டியுடன் மோதியமையினால் விபத்து இடம்பெற்றது.

இதில் 23 வயதுடைய இளைஞன் உயிரிழந்ததுடன், அவரது காதலி மற்றும் சகோதரன் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

எனினும் காதலன் உயிரிழந்த விடயம் அறியாமல் காதலி சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ராகம வைத்தியசாலையில் சிக்சை பெற்று வரும் காதலி தனது காதலனுக்காக கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடித்தையும் உயிரிழந்த இளைஞனின் கையில் வைத்து இறுதி அஞ்சலி நிகழ்வு நடை பெற்றது எனத் தெரிவிக்கப்படுகிறது.

தனது காதலன் உயிரிழந்தமை தெரியாமல் காதலி கடிதத்தில் எழுதியுள்ள உருக்கமான வரிகள், உறவினர்கள் மற்றும் நண்பர்களைப் பெரிதும் கவலை அடையச் செய்துள்ளது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like