46 அடி உயர அந்­த­ரத்தில் நடந்தேறிய வினோத திருமணம்

ஜேர்­ம­னியை சேர்ந்த ஒரு ஜோடி­யினர் 46 அடி உய­ரத்தில் கட்­டப்­பட்ட கம்­பியில் பய­ணித்த மோட்டார் சைக்­கிளில் தொங்­கிய நிலையில் திரு­மணம் செய்­து­கொண்­டுள்ளனர்.

நிகோல் பெக்ஹோஸ் என்­ப­வரும் அவரின் காத­லி­யான ஜேன்ஸ் நோர் என்­ப­வ­ருமே இவ்­வாறு அந்­த­ரத்தில் திரு­மணம் செய்­து­கொண்­டனர்.

ஜேர்­ம­னியின் கிழக்குப் பிராந்­திய நக­ரான ஸ்டெஸ்­பர்­ட்டில் கடந்த சனிக்­கி­ழமை இந்த விநோத திரு­மண வைபவம் நடை­பெற்­றது.

இதில், 46 அடி (14 மீற்றர்) உய­ரத்தில் கட்­டப்­பட்ட கம்­பியில் சாகசக் கலைஞர் ஒருவர் செ­லுத்­திய மோட்டார் சைக்­கிளில் மண­மக்கள் இரு­வரும் தொங்­கிக்­கொண்­டி­ருந்­தனர். தீய­ணைப்புப் படை­யினர் பயன்­ப­டுத்­தும் ஏணி­யொன்றின் மீது நின்­ற­வாறு பாதி­ரியார் ஒருவர் இவர்­க­ளுக்கு திரு­மணம் செய்து வைத்தார்.

நிகோல் பெக்ஹோஸ், ஜேன்ஸ் நோர் திரு­ம­ணத்தை சுமார் 3000 பேர் நேரில் பார்வையிட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like