இரவு வேளையில் அழைத்துச் செல்லப்படும் பெண்கள்….. யாழ் நகரில் நடப்பது என்ன? போட்டுடைத்த மாநகர சபை உறுப்பினர்….!!

யாழ்ப்­பா­ணம், மாந­கர சபைக்­குட்­பட்ட பகு­தி­க­ளில் இரவு வேளை­க­ளில் பெண்­கள் வாக­னங்­க­ளில் மாறி மாறி அழைத்­துச் செல்­லப்­ப­டு­கின்­ற­னர். அதைப் பொலி­ஸா­ரும் கண்­டும் காணா­தது போன்று உள்­ள­னர் என்று மாந­கர சபை­யின் பெண் உறுப்பி­னர் சுட்­டிக்­காட்­டி­னர்.யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை­யின் அமர்வு நேற்று நடை­பெற்­றது. அதில் பெண்­கள் தொடர்­பான நிலை­யி­யல் குழு­வின் தேவை­கள் தொடர்­பில் ஆரா­யப்­பட்­டது. அதன்­போதே அவர்­கள் இவ்­வாறு சுட்­டிக்­காட்­டி­னர். அவர்­கள் தெரி­வித்­தா­வது;

யாழ்ப்­பா­ணம் பேருந்து நிலை­யம் உட்­பட நகர்ப்­பு­றங்­க­ளில் பெண்­கள் பல்­வேறு பிரச்­சி­னை­களை எதிர்­கொண்­ட­னர். யாழ்ப்­பா­ணம் ஜே-109 கிராம அலு­வ­லர் பிரி­வில் பாட­சா­லைக்­குச் செல்­லாத சிறு­வர்­கள் 15 பேர் உள்­ள­னர் என்று கண்­ட­றி­யப்­பட்டு நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டது. படிப்பை நிறுத்­திய பெண்­கள் எத்­த­னையோ பேர் வீட்­டில் உள்­ள­னர். அவர்­க­ளுக்கு வாழ்­வா­தார உத­வி­கள் வழங்க எமது சபை­யின் சிறப்­புக் குழுக்­கள் நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும்.

யாழ்ப்­பா­ணம் நகரை அண்­டிய பகு­தி­க­ளில் இரவு நேரத்­தில் 8 மணி தொடக்­கம் சுமார் 10 பெண்­கள் ஒரு வாக­னத்­தில் அழைத்­துச் செல்­லப்­ப­டு­கின்­ற­னர். அதைப் பொலி­ஸார் கண்­டும் காணா­மல் இருக்­கின்­ற­னர். அவர்­க­ளும் இதற்கு உடந்­தையா என்று சந்­தே­கம் என்று தோன்­று­கின்­றது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார் .