இன்றைய ராசிபலன் 24-06-2018

மேஷம்: அதிர்ஷ்டகரமான நாள். எதிர்பாராத பணவரவுக்கும், உறவினர் மற்றும் நண்பர்களின் சந்திப்பால் மகிழ்ச்சி ஏற்படவும் வாய்ப்பு உண்டாகும். தாயின் உடல்நலனில் கவனம் தேவை. சிலருக்கு நீண்டநாளாக எதிர்பார்த்து காத்திருந்த சுபச்செய்தி இன்று கிடைக்கக்கூடும். மாலையில் குடும்பத்துடன் வெளியிடங்களுக்குச் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்ததைவிட கூடுதலாக இருப்பது மகிழ்ச்சி தரும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் ஆதாயத்துடன் மகிழ்ச்சி ஏற்படும்.
ரிஷபம்: மனதில் தைரியம் அதிகரிக்கும். துணிச்சலுடன் செயல்படுவீர்கள். மறைமுக எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் மறையும். தந்தைவழியில் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். சகோதரர்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். இளைய சகோதரர் உதவி கேட்டு வருவார். தாயின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போலவே இருக்கும். சக வியாபாரிகளால் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.
மிதுனம்: தெய்வ அனுக்கிரகம் நிறைந்த நாளாக இருக்கும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை ஏற்பட வாய்ப்பு உண்டு. புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். வெளியிடங்களில் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். மாலையில் உறவினர்கள் வருகையால் மனச் சங்கடம் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் விற்பனை வழக்கம் போலவே இருக்கும். பணியாளர்களால் பிரச்னைகள் ஏற்படக்கூடும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும்.
கடகம்: புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்க்கவும். வழக்கமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். சிலருக்கு குடும்ப விஷயமாக வெளியூர் செல்ல நேரிடும். சிலருக்கு வெளியூரில் இருக்கும் கோயில்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படக்கூடும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் ஏற்படக்கூடும். வெளியூர் அல்லது வெளி மாநிலங்களிலிருந்து எதிர்பார்த்த சுபச்செய்தி கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போலவே இருக்கும். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ஆன்மிக நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படக்கூடும்.
சிம்மம்: மனதில் உற்சாகம் அதிகரிக்கும். இளைய சகோதர வகையில் அனுகூலம் உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணையின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தருவதாக இருக்கும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் விற்பனை விறுவிறுப்பாக நடக்கும். லாபமும் அதிகரிக்கும். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கலைநிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படக்கூடும்.
கன்னி: திடீர் செலவுகள் ஏற்படும். என்றாலும் தேவையான பணம் கையில் இருப்பதால் சமாளித்து விடுவீர்கள். சகோதரர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும். தந்தையின் உடல் நலனில் கவனம் தேவை. வெளியூர்ப் பயணங்கள் மேற்கொள்வதைத் தவிர்க்கவும். மாலையில் நண்பர்களின் சந்திப்பு மனதுக்கு ஆறுதல் தருவதாக அமையும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். பணியாளர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சகோதரர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்ளவும்.
துலாம்: மகிழ்ச்சி தரும் நாள். கணவன் – மனைவிக்கிடையே இருந்து வந்த மனவருத்தம் நீங்கி அந்நியோன்யம் அதிகரிக்கும். சிலருக்கு உறவினர்கள் மூலம் எதிர்பாராத பொருள்சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு. பழைய கடன்கள் விஷயத்தில் கவனம் தேவை. சிலர் தெய்வப் பிரார்த்தனை களை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும். லாபமும் அதிகரிக்கும். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய முயற்சிகளில் வெற்றி உண்டாகும்.
விருச்சிகம்: தேவையான பணம் கையிலிருந்தாலும், தேவையற்ற செலவுகள் ஏற்படுமென்பதால், கையிருப்பு கரைவதுடன் கடன் வாங்கவும் நேரிடும். புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக சற்று அலைச்சல் ஏற்படக்கூடும். தாய்வழி உறவினர்கள் வருகை உற்சாகம் தருவதாக இருப்பதுடன் செலவுகளையும் ஏற்படுத்தும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்களின் எதிர்பாராத சந்திப்பு மகிழ்ச்சி தரும்.
தனுசு: உற்சாகமான நாளாக இருக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். எதிர்பாராத பணவரவும் ஏற்படும். உறவினர்கள் வருகையால் பொருள்சேர்க்கை உண்டாகும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். தாய் மாமன் வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். தாயின் உடல் ஆரோக்கியம் மேம்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக இருக்கும். பங்குதாரர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய முயற்சி சாதகமாக முடியும்.
மகரம்: மகிழ்ச்சியான நாள். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். உறவினர் வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கக்கூடும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். சிலருக்கு சகோதர வகையில் சிறுசிறு சங்கடங்கள் ஏற்பட்டாலும் அதனால் பாதிப்பு எதுவுமிருக்காது. தாய்வழி உறவினர் வகையில் சுபச் செலவுகள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் விற்பனை அதிகரிக்கும். பங்குதா ரர்களிடம் எதிர்பார்த்த பணம் கிடைக்கும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் அலைச்சல் ஏற்படக்கூடும்.
கும்பம்: காரிய அனுகூலம் உண்டாகும் நாள். புதிய முயற்சிகளை மட்டும் தவிர்ப்பது நல்லது. மற்றவர் களுடன் வீண் மனவருத்தம் ஏற்படுமென்பதால், பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்க வும். உறவினர்கள் வகையில் சில சங்கடங்களைச் சந்திக்க நேரிடலாம். சகோதரர் உதவி கேட்டு வருவார். நீண்டநாளாக சந்திக்காமல் இருந்த நண்பர்களைச் சந்தித்து மகிழும் வாய்ப்பு ஏற்படும். வியாபாரத்தில் பணியாளர்களின் ஒத்துழைப்பு சுமாராகத்தான் இருக்கும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயணம் தவிர்ப்பதுடன் கடன்கள் விஷயத்திலும் கவனமாக இருக்கவும்.
மீனம்: பொறுமையைக் கடைப்பிடிக்கவேண்டிய நாள். முயற்சிகளில் தடை, தாமதம் ஏற்படக்கூடும். உறவினர்கள் வகையில் எதிர்பார்த்த காரியம் சற்று தாமதமாக முடியும். முக்கியமான விஷயத்தில் குடும்பப் பெரியவர்களின் ஆலோசனையைக் கேட்டுச் செயல்படுவது நல்லது. தாயின் உடல் நலனில் கவனம் தேவை. நண்பர்களின் சந்திப்பு ஆதாயம் தருவதாக இருக்கும். வியாபாரத்தில் பணியாளர்கள் முரண்டு பிடித்தாலும் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like