யாழில் பெண் கழுத்தறுத்து கொலை!

மானிப்பாய் லோட்டன் வீதியிலுள்ள வீடொன்றிலில் வயோதிப் பெண் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

“தர்ம எடுக்க வந்து பாவனை செய்தவர்களே வயோதிபப் பெண்ணை கொலை செய்திருக்கின்றனர். அவர் அந்த வீட்டிலுள்ள முதுமைப் பெண் ஒருவரை பராமரித்து வருபவர். சம்பவத்தையடுத்து ஒருவர் கைது செய்யப்பட்டார். அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் செயற்படுகிறார்” என்று மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் நேற்று முற்பகல் (28) இடம்பெற்றது.

மானிப்பாய் கல்லூரி ஒழுங்கை என்ற விலாசத்தில் தனித்து வாழும் நாகரத்தினம் குமராசாமி (வயது-88) என்பவரது வீட்டில் வைத்தே அவரை பராமரிப்பதற்கு பணிக்கு அமர்த்தப்பட்ட பெண்ணே கொலை செய்யப்பட்டார்.

மானிப்பாய், சங்கபிள்ளை வீதியைச் சேர்ந்த தம்பையா லீலாதேவி (வயது -60) என்ற வயோதிப் பெண்ணே கொலை செய்யப்பட்டார்.

“தர்ம எடுக்க ஒருவர் வந்தார். அவருக்கு 100 ரூபா பணம் வழங்கப்பட்டது. அவர் சென்று சிறிது நேரத்தில் மீளவும் வந்தார். வந்து வீட்டில் பணியாற்றும் முதுமைப் பெண்ணை கழுத்தறுத்துவிட்டு தப்பித்தார். அவருடன் இன்னுமொருவரும் வந்தார் எனத் தோன்றுகின்றது” என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது என்று பொலிஸார் மேலும் கூறினர்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like