இன்றைய ராசிபலன் 01-07-2018

மேஷம்: உற்சாகமான நாள். தேவையான பணம் இருந்தாலும், தேவையற்ற செலவுகளும் ஏற்படக்கூடும். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். தந்தை வழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். சிலருக்குக் குடும்பத்துடன் கோயி லுக்குச் செல்லும் வாய்ப்பு ஏற்படும். மாலையில் நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். வியாபாரம் வழக்கம்போலவே இருக்கும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் காரிய அனுகூலம் உண்டாகும்.

ரிஷபம்: உற்சாகமான நாள். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். கணவன் – மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேற்றுமை நீங்கி, அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணை வழி உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். மற்றவர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். வியாபாரத்தில் லாபம் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருக்கும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.
மிதுனம்: இன்று எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவேண்டிய நாள். புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும் விட்டுக்கொடுத்துச் செல்லவும். நண்பர் களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். திடீர் செலவுகளால் கையிருப்பு கரையும். மாலையில் குடும்பத்துடன் உறவினர் அல்லது நண்பர் வீட்டு விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். வியாபாரத்தில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். விற்பனை எதிர்பார்த்தபடி இருக்கும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது.
கடகம்: உற்சாகமான நாள். கணவன் மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். சகோதரர்கள் உங்கள் யோசனைக்கு முக்கியத்துவம் தருவார்கள். மனதில் தைரியம் அதிகரிக்கும். சிலருக்கு புதிய டிசைனில் ஆடை வாங்கும் யோகம் உண்டாகும். பிற்பகலுக்கு மேல் வாழ்க்கைத் துணைவழி உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். பங்குதாரர்களால் அனுகூலம் உண்டாகும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும்.
சிம்மம்: உடல் ஆரோக்கியம் மேம்படும். புதிய முயற்சி சாதகமாக முடியும். கணவன் – மனைவிக்கிடையே தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். எதிரிகளின் தொல்லைகள் நீங்கும். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். வீட்டில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்வீர்கள். அதன் காரணமாக உடல் அசதி ஏற்படும். வியாபாரம் வழக்கம்போலவே நடைபெறும். பணியாளர்களால் செலவுகள் ஏற்படக்கூடும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.
கன்னி: தேவையற்ற செலவுகளால் மனதில் சஞ்சலம் ஏற்படும். உடல்நலம் சற்று பாதிக்கப்படும். தேவையில்லாத அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது. உறவினர்களிடம் பேசும்போது பொறுமை அவசியம். உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரணையாக நடந்துகொள்வது அவசியம். வியாபாரத்தில் பற்று வரவு சுமாராகத்தான் இருக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு இருக்கும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பொருள்சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு.
துலாம்: மனதில் நிம்மதி ஏற்படும். தேவையான பணம் கையில் இருப்பதால் செலவுகளைச் சமாளிக்க முடியும். எடுத்த காரியங்கள் தடையின்றி முடியும். தாயின் உடல்நலனில் கவனம் தேவை. வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். வீட்டில் உறவினர்கள் வருகையும் அதனால் மகிழ்ச்சியும் ஏற்படும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். பங்குதாரர்களால் ஆதாயம் உண்டாகும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.
விருச்சிகம்: புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். தேவையான பணவரவு இருக்கும் என்பதால் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். உங்கள் ரசனைக்கேற்ப புதிய ஆடைகளை வாங்கி மகிழ்வீர்கள். சுபகாரியங்களுக்கான முயற்சி சாதகமாக முடியும். நண்பர்களின் சந்திப்பு உற்சாகமும், மகிழ்ச்சியும் தரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பணியாளர் களின் ஒத்துழைப்பு சுமாராகத்தான் இருக்கும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் அனுகூலம் உண்டாகும்.
தனுசு: குடும்பம் அல்லது வேலை தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதை இன்றைக்குத் தவிர்ப்பது நல்லது. வீண் செலவுகள் ஏற்படக்கூடும். காரியங்களில் தடை, தாமதம் ஏற்படக்கூடும். நண்பர்கள், உறவினர்களுடன் தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. வியாபாரத்தில் வழக்கமான நிலையே காணப்படும். பங்குதாரர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது.
மகரம்: எதிர்பாராத பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது சிலருக்கு வாழ்க்கைத்துணையால் ஆதாயம் கிடைக்கும். குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பிள்ளைகள் வகையில் மகிழ்ச்சி உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வியாபாரத்தில் பணியாளர்களிடம் கனிவான அணுகுமுறை அவசியம். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.
கும்பம்: தேவையற்ற அலைச்சலும், அதனால் வீண் செலவுகளும் ஏற்படும். தேவையில்லாத குழப்பங்களின் காரணமாக எந்த செயலிலும் ஈடுபட முடியாமல் இருப்பீர்கள். கணவன் – மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் செல்வது அவசியம். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் பணியாளர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது எச்சரிக்கையாக இருக்கவும்.
மீனம்: எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு எனினும் உடல்நலம் சற்று பாதிக்கப்படும் என்பதால் அன்றாட பணிகளில் ஈடுபடுவது கடினமாக இருக்கும். மாலையில் பள்ளி, கல்லூரிக்கால நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். சிலர் புதிய ஆடை, ஆபரணம் வாங்கி மகிழ்வீர்கள். எதிரிகளால் மறைமுக ஆதாயம் உண்டாகும்.. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடி இருக்கும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் நல்ல திருப்பம் ஏற்படக்கூடும்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like