கோர விபத்தில் சிக்கி உயிரிழந்த குழந்தை : இருவர் படுகாயம்!!

மட்டக்களப்பு – தும்பங்கேணி, பழுகாமம் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு வயது சிறுவன் உயிரிழந்துள்ளதுடன் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

தும்பங்கேணி, பழுகாமம் சந்தியில் இன்று காலை டிப்பர் வாகனமும் முச்சக்கரவண்டியும் மோதுண்டதன் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

பலாச்சோலையில் இருந்து களுவாஞ்சிகுடிக்கு சென்ற முச்சக்கரவண்டியும், சம்மாந்துறையில் இருந்து கொக்கட்டிச்சோலைக்கு சென்ற டிப்பர் வாகனமும் மோதிய நிலையில் முச்சக்கரவண்டி இழுத்துச் செல்லப்பட்டதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

இதன்போது குறித்த முச்சக்கரவண்டியில் பயணித்தி இரண்டு வயது சிறுவன் ஸ்தலத்திலேயே உயிரிழந்ததாகவும் சிறுவனின் தாயாரும் முச்சக்கரவண்டி சாரதியும் படுகாயமடைந்ததாகவும் வெல்லாவெளி பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சடலம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் படுகாயமடைந்தவர்களும் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இரண்டு வாகனங்களினதும் வேகமே விபத்து காரணம் என தெரிவித்த பொலிஸார் இச்சம்பவம் தொடர்பில் டிப்பர் வாகனத்தின் சாரதியை கைது செய்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like