யாழில் மாயமாகிய மாணவன்!

யாழ். காரைநகர் கொள்ளடைப்பைச் சேர்ந்த 15 வயதுடைய கோவிந்தராசா விஸ்ணு என்ற மாணவன் காணாமல் போயுள்ளார்.

குறித்த மாணவனை நேற்று மாலை 4.00 மணியில் இருந்து காணவில்லை என அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

இவர் யாழ். காரைநகர் இந்துக் கல்லூரியில் தரம் 10 இல் கல்வி கற்று வருகின்றார்.

இது தொடர்பாக ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிறுவன் தொடர்பான விபரங்களை அறிந்தவர்கள் 077-4985357, 077-3400478 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு அவரது மாமா தே.இலங்கேஸ்வரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like