கொலையா? தற்கொலையா? கென்பியூஸான அமைச்சர் விஜயகலா!!

சுழிபுரம், காட்டுப்புலத்தைச் சேர்ந்த சிறுமி றெஜினா தற்கொலை செய்துகொண்டார் என்று கொழும்பு அமைச்சர்கள் முன் தெரிவித்தார் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா.

இன்று யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் “உத்தியோகபூர்வப் பணி” அரச தலைவர் மக்கள் சேவைத் தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் 8ஆவது வேலைத் திட்டம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. அதில் இராஜாங்க அமைச்சர் உரையாற்றினார்.

“உண்மையிலேயே ஒரு பெண் எவ்வளவு துன்பத்துக்கு உள்ளாகின்றாள் என்பது பெண்ணுக்கே விளக்கும். ஆணுக்கு விளங்கமாட்டாது. 6 வயதுச் சிறுமி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு தற்கொலை செய்யப்பட்டுள்ள இந்த நிலையில் எதற்காக உத்தியோகபூர்வப் பணி இந்த மாவட்டத்துக்கு?” என்று அமைச்சர்களிடம் கேள்வி எழுப்பினார்.

சுழிபுரம், காட்டுப்புலத்தில் 6 வயதுச் சிறுமி றெஜினா பாலியல் வன்கொடுமையின் பின் கொலை செய்யப்பட்டார். சிறுமிக்கு நீதிகோரிப் பல இடங்களில் மக்கள் ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர். “சிறுமி கயிற்றால் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது உடலில் வன்கொடுமைக்கான தடயங்கள் உள்ளன. எனினும் வன்புணர்வுக்குட்படுத்தப்படமைக்கான தடயம் இல்லை” என்று உடற்கூற்றுப் பரிசோதனையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

சுழிபுரம், காட்டுப்புலத்தில் 6 வயதுச் சிறுமி றெஜினா பாலியல் வன்கொடுமையின் பின் கொலை செய்யப்பட்டார். சிறுமிக்கு நீதிகோரிப் பல இடங்களில் மக்கள் ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர். இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் சம்பவ இடத்துக்கு வரவில்லை என்றும், ஆறுதல் தெரிவிக்கக் கூட அந்தப் பக்கம் வரவில்லை என்றும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டியிருந்தனர்.