விறுவிறுப்பாகும் `விஸ்வாசம்’.! நயன்தாராவின் கதாபாத்திரம் குறித்த ருசிகர தகவல்.!!

தல அஜித் நடிப்பில், சிவா இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் படம் விஸ்வாசம். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார் இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும் விவேக், யோகிபாபு, ரோபோ சங்கர், தம்பி ராமையா, இமான் அண்ணாச்சி, ரமேஷ் திலக் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து முடிந்த நிலையில்,நேற்று முன்தினம் படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு துவங்கியது. மேலும் படத்தில் நயன்தாராவின் கதாபாத்திரம் குறித்த தகவல் வெளிசமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது இருக்கிறது.

இந்த தகவலில் விஸ்வாசம் படத்தில் நயன்தாரா டாக்டராக நடிப்பதாக வெளியாகி இருக்கிறது.இந்த படத்தில் அஜித் முதுமை மற்றும் இளமை தோற்றம் என இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்கிறார். மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு 40% முடிவடைந்துள்ளதாகவும், படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.