ஜனாதிபதி மைத்திரி இன்று விடுத்த அதிரடி உத்தரவு!

நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் உயர்த்தப்பட்ட எரிபொருள் விலையை உடனடியாக குறைக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.நேற்று காணப்பட்ட விலையிலேயே எரிபொருள் விற்பனை செய்யுமாறு பெற்றோலிய கூட்டுத்தாபனத்திடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருட்களின் விலைகளை அதிகரித்ததையடுத்து, லங்கா இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனமும் எரிபொருட்களின் விலைகளை நேற்று நள்ளிரவு முதல் அதிகரித்துள்ளது.

அதற்கமைய ஒக்டைன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 137 ரூபாவுக்கும், ஒக்டைன் 95 ரக பெற்றோல் லீற்றர் 148 ரூபாவுக்கும், டீசல் லீற்றர் ஒன்றின் விலை109 ரூபாவுக்கும், சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 119 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்பட வேண்டும் என ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.ஜனாதிபதியின் உத்தரவை அடுத்து வாகன சாரதிகள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.