‘எங்கள் மண்ணை விட்டு இராணுவமே வெளியேறு’- யாழ்ப்பாணக் கோட்டையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்!! (படங்கள்)

தொல்பொருள் திணைக்களத்துக்கச் சொந்தமான கோட்டைக் காணியை இராணுவத்துக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அங்கு இராணுவ முகாம் அமைக்கப்படக் கூடாதென வலியுறுத்தியும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் யாழ்ப்பாணம் கோட்டையின் தெற்குவாசல் பக்கமாக இன்று நடைபெற்றது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்தது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள்” எங்கள் மண்ணை விட்டு இராணுவமே வெளியேறு, நில ஆக்கிரமிப்புக்கு எதிராக ஒன்றிணையுங்கள், வெளியேறு வெளியேறு இராணுவமே வெளியேறு” போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளைத் தாங்கியிருந்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் செ.கஜேந்திரன் வடக்கு மாகாண சபை உறுப்பினர் பொ.ஐங்கரநேசன், மாநகர சபை உறுப்பினர் வி.மணிவண்ணன், சட்டத்தரணி சுகாஸ் மற்றும் சமூக அமைப்புக்களின் பிரிதிநிதிகள், கட்சியின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

 

 

 

Get real time updates directly on you device, subscribe now.

You might also like