இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்ட காங்கேசன்துறை எரிபொருள் நிரப்பு நிலையம் (படங்கள்)

விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு!!

வலிகாமம் வடக்கில் தெல்லிப்பழை பிரதேச செயலகத்துக்குட்பட்ட இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்ட தெல்லிப்பழை பலநோக்கு கூட்டுறவு சங்க எரிபொருள் நிரப்பு நிலையம் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் மீள் சீரமைப்புச் செய்யப்படுகிறது.

இன்னும் 4 மாதங்களில் அது மீளச் செயற்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

டீசல், பெற்றோல், மண்ணெண்ணை ஆகியவற்றுக்கான எரிபொருள் தாங்கிகள் வரவழைக்கப்பட்டுள்ளன.

சீரமைப்புப் பணிகள் முடிவுற்று நிரப்பு நிலையம் செயற்படும் பட்சத்தில் மீள்குடியேற்றப்பட்ட மக்கள் நன்மை அடைவார்கள்.

 

 

Get real time updates directly on you device, subscribe now.

You might also like