விடுதலைப்புலிகள் குறித்த படத்திற்கு இலங்கையில் தடையா?.!

இலங்கையில் ஈழ போரின் போது விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் 12 வயது மகன் பாலச்சந்திரன் மிகக் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார்.

விடுதலைப்புலிகள் குறித்த சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படத்தை இலங்கையில் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.

விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனைப் பற்றியும், அவரது மகன் பாலச்சந்திரனின் கொலை குறித்தும் கதை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை ஈழன் இளங்கோ என்பவர் இயக்கியுள்ளார். இந்த படத்தின் பெயர் “சாட்சிகள் சொர்க்கத்தில்” ஆகும். சதீஷ் வர்ஷன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் படத்தை வெளியிட பட குழு முயற்சி எடுத்து வருகிறது. இந்நிலையில், இப்படத்தை இலங்கையிலும் வெளியிடும் நோக்கில் அங்குள்ள தணிக்கை குழுவுக்கு அனுப்பப்பட்டது.

ஆனால், இப்படம் இலங்கையில் வெளியானால் சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்படும் எனக்கூறி தடைவிதித்தது. மேலும், கடைசிக்கட்ட போர், சித்ரவதை போன்றவை படத்தில் எடுக்கவில்லை என்று கூறியும் இலங்கை தணிக்கை குழு, அதை ஏற்க மறுத்துவிட்டதாக இப்படத்தின் இயக்குநர் ஈழன் இளங்கோ தெரிவித்துள்ளார்.