இன்றைய ராசிபலன் 12-07-2018

மேஷம்: கணவன் மனைவிக்கு இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். தந்தை வழியில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சிலருக்கு அவசரமான அலுவலகப் பணிகளை வீட்டில் இருந்தபடி முடிக்கவேண்டி வரும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடி இருக்கும். பங்குதாரர்கள் உங்கள் முயற்சிக்கு ஆதரவாக இருப்பார்கள். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்க்கவும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அதிகாரிகளை அணுகும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.
ரிஷபம்: எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். தேவையான பணம் கையில் இருந்தாலும் வீண் செலவுகளும் ஏற்படக்கூடும். சிலருக்கு குடும்பம் தொடர்பாக வெளியூர்ப் பயணம் மேற் கொள்ள நேரிடும். உங்கள் முயற்சிகளுக்கு சகோதரர்கள் ஒத்துழைப்புத் தருவார்கள். உறவினர்கள் வருகையால் சிறுசிறு சங்கடம் ஏற்படக்கூடும். வியாபாரம் வழக்கம்போலவே காணப்படும். சக வியாபாரிகள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களிடம் விவாதம் செய்வதை தவிர்ப்பது நல்லது, ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.
மிதுனம்: எதிர்பாராத தனலாபம் உண்டாகும். வாழ்க்கைத்துணை உங்கள் முயற்சிகளுக்கு ஆதரவாக இருப்பார். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். முக்கியமான முடிவுகள் எதுவும் எடுக்கவேண்டாம். கூடுமானவரை வீண் அலைச்சலைத் தவிர்த்துவிடுவது நல்லது. வீட்டில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்தபடி லாபம் கிடைப்பதுடன், பணியாளர் களால் செலவுகளும் ஏற்படக்கூடும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய நண்பர்களின் சேர்க்கையும் அவர்களால் ஆதாயமும் உண்டாகும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியூர்ப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளியூரிலுள்ள கோயில்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படும்.
கடகம்: வழக்கமான பணிகளில் மட்டுமே ஈடுபடவும். எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு குறையும். சிலருக்கு எதிர்பாராத பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு உண்டு. முயற்சியில் தடை ஏற்படும். சிலருக்குக் குடும்பத்துடன் அருகில் உள்ள கோயில்களுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும். சகோதர வகையில் சிறுசிறு சங்கடங்கள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். பணியாளர்களை தட்டிக்கொடுத்து வேலை வாங்குவது நல்லது. புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளால் மனதில் சஞ்சலம் ஏற்படும். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தாயின் விருப்பத்துக்காக செலவு செய்யவேண்டி வரும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளியூரிலிருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும்.
சிம்மம்: எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. கணவன் – மனைவிக்கு இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். உங்களுடைய யோசனையை வாழ்க்கைத்துணை ஏற்றுக்கொள்வார். வாழ்க்கைத் துணைவழி உறவுகளிடம் நீங்கள் எதிர்பார்த்த காரியம் முடியும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்க்காத அளவுக்கு விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் பொருள் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு. பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.
கன்னி: எதிர்பாராத பணவரவு உண்டாகும். திடீர் செலவுகளும் ஏற்படும். குடும்பத்தில் உறவினர்கள் வருகை சில பிரச்னைகளை ஏற்படுத்தக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிக்கவும். சிலருக்கு மாலையில் லேசான அளவில் தலைவலி வரக்கூடும் என்பதால், ஓய்வு எடுத்துக் கொள்வது அவசியம். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு ஒன்றை எடுப்பீர்கள். வியாபா ரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியுடன் ஆதாயமும் தருவதாக இருக்கும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சகோதரர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.
துலாம்: பிள்ளைகளுக்காக செலவு செய்யவேண்டி வரும். சிலருக்கு வெளியூர்க் கோயில்களை தரிசிக்கவும் வாய்ப்பு ஏற்படக்கூடும். இன்று எதிலும் நீங்கள் பொறு மையைக் கடைப்பிடிக்கவேண்டும். உறவி னர்களால் மனவருத்தம் ஏற்படக்கூடும் என்பதால், அவர்களிடம் பேசும்போது பொறுமையை கடைப்பிடிக்கவும். வியாபாரத்தில் பணியாளர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். விற்பனை வழக்கம்போலவே இருக்கும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழும் வாய்ப்பு ஏற்படும். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீண் விவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்த்துவிடுவது நல்லது. விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தேவையற்ற செலவுகளால் கையிருப்பு கரையும்.
விருச்சிகம்: புதிய முயற்சியைத் தவிர்க்கவும். மனதில் இனம் தெரியாத குழப்பம் ஏற்படும்.நீண்ட நாள்களாகப் பார்க்காமல் இருந்த தாயைப் பார்க்கவும், அவருடைய தேவையை நிறைவேற்றவும் வாய்ப்பு கிடைத்து மகிழ்ச்சி அடைவீர்கள். சிலருக்கு தாய்மாமன் வகையில் ஆதாயம் கிடைக்கக்கூடும். மாலையில் நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். வியாபாரத்தில் அவசர முடிவுகளைத் தவிர்க்கவும். பணியாளர்களை அனுசரித்துச் செல்லவும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் செலவுகள் ஏற்படக்கூடும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளியூரிலிருந்து எதிர்பார்த்த செய்தி கிடைப்பதில் தாமதம் ஏற்படக்கூடும்.
தனுசு: அனைத்துக் காரியங்களும் அனுகூலமாக முடியும். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டாலும் கிடைத்துவிடும். புதிய முயற்சிகளைத் தொடங்குவதற்குச் சிறந்த நாள். கணவன் – மனைவிக்கிடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். நண்பர்களிடம் எதிர் பார்த்த உதவி கிடைக்கும். குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலை காணப்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்புத் தருவார்கள். மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குடும்பத்துடன் விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படக்கூடும். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்க வகையில் ஆதாயம் ஏற்பட வாய்ப்பு உண்டு.
மகரம்: தந்தையின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வீர்கள். சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும். சகோதரர்களுக்கு உதவி செய்வீர்கள். சிலருக்கு புதிய ஆடைகளை வாங்கும் வாய்ப்பு உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும். சிலருக்குஅலுவலகப் பணியின் காரணமாக வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முக்கிய பிரமுகர்களின் உதவியால் காரிய அனுகூலம் உண்டாகும். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சகோதரர்களிடம் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வராது என்று நினைத்த கடன் தொகை கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டாகும்.
கும்பம்: மனம் உற்சாகத்துடன் காணப்படும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. சிலருக்குக் குலதெய்வக் கோயிலுக்குச் சென்று பிரார்த்தனையை நிறைவேற்றும் சந்தர்ப்பம் கூடி வரும். தாயின் விருப்பத்தை நிறைவேற்ற செலவு செய்வீர்கள். உணவு விஷயத்தில் கவனம் தேவை. பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக்கொள்வார்கள். வியாபாரம் வழக்கம்போலவே இருக்கும். சக வியாபாரிகளுக்காக செலவு செய்யவேண்டி வரும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் திடீர் செலவுகள் ஏற்படக்கூடும். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் தரிசனமும் ஆசிகளும் பெறும் வாய்ப்பு உண்டாகும்.
மீனம்: திடீர் செலவுகள் ஏற்படக்கூடும் என்றாலும் சமாளித்துவிடுவீர்கள்.. தாய்வழி உறவுகள் உதவி கேட்டு வருவார்கள். நண்பர்கள் உங்கள் தேவையறிந்து உதவி செய்வார்கள். சிலருக்கு வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். உறவினர் களை அனுசரித்துச் செல்வது நல்லது. வியாபாரத்தில் பங்குதாரர்களால் சங்கடம் ஏற்பட்டு நீங்கும். மற்றபடி விற்பனையும் லாபமும் வழக்கம்போலவே இருக்கும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் நலனில் கவனமாக இருப்பது அவசியம். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழியில் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் வருகையால் செலவுகள் அதிகரிக்கும்.

Get real time updates directly on you device, subscribe now.