பதிவுத் திருமணத்துக்கு மணமகன் காத்திருப்பு- மணப்பெண் தப்பியோட்டம்!!

திரு­மண ஏற்­பா­டு­கள் செய்து, பதி­வுத் திரு­ம­ணத்­துக்­காகப் பதி­வா­ளர் பணி­ய­கத்­தில் மண­ம­கன் உட்­ப­டச் சக­ல­ரும் காத்­தி­ருக்க, அங்கு வந்த மண­ம­கள் திடீ­ரென்று தப்­பி­யோ­டி­விட்­டார். அத­னால் இரு­வீட்­டா­ருக்­கும் இடை­யில் தர்க்­கம் ஏற்­பட்­டது.

இந்­தச் சம்­ப­வம் தென்­ப­கு­தி­யில் சில­நாள்­க­ளுக்கு முன்­னர் இடம்­பெற்­றது. இது தொடர்­பில் மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது:

ஆடைத்­தொ­ழிற்­சா­லை­யொன்­றில் பல கால­மா­கத் தொழில்­பு­ரிந்து வந்த அந்­தப் பெண்­ணின் கனவு, வெளி­நாட்­டுக்­குத் தொழில்­பு­ரி­யச் செல்­ல­வேண்­டும் என்­பதே. இதற்­கி­டை­யில் பெண்­ணின் நெருங்­கிய உற­வி­னர் ஒரு­வர் நல்ல மாப்­பிள்ளை இருக்­கி­றார் என்று பெண்­ணி­டம்­கூறி வற்­பு­றுத்­தித் திரு­ம­ ணத்­துக்­குச் சம்­ம­திக்க வைத்­துள்­ளார்.

அந்­தப்­பெண் வருங்­கா­லக் கண­வ­ரி­டம் வெளி­நாட்­டுப் பயண ஆசை­யைக் கூறி­யுள்­ளார். பதி­வுத் திரு­ம­ணம் செய்­த­பின்­னர் அந்­தப் பெண் வெளி­நாட்­டுக்­குச் செல்­லு­மாறு கூறி­யுள்­ளார்.

பதி­வுத் திரு­ம­ணத்­துக்­கான நாள் குறிக்­கப்­பட்­டது. இரண்டு வீட்­டா­ரின் குடும்­பங்­க­ளும் திரு­ம­ணப் பதி­வா­ளர் பணி­ய­கத்­தில் திரு­மண பதி­வுக்­கான நல்ல நேரம் வரு­ம்வரை காத்­தி­ருந்­த­னர். நல்ல நேர­மும் வந்­தது. மண­ம­கன் தயார். ஆனால் மணப் பெண்­ணைக் காண­வில்லை. விசா­ரித்­த­போது அங்கு நின்­றி­ருந்த காரில் ஏறி மாய­மா­கி­விட்­டார் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

சிறிது நேரத்­தில் அலை­பே­சி­யில் தொடர்­பு­கொண்ட அந்­தப் பெண், இந்­தத் திரு­ம­ணத்­தில் இணைந்­து­விட்­டால் தன் வெளி­நாட்­டுக் கனவு நிறை­வே­றாது என்­றும், அத­னால்­தான் அந்த இடத்தை விட்­டுத்­தான் வெளி­யே­றி­ய­தா­கக் கூறி­யுள்­ளார்.

அத­னால் அங்கு இரண்டு குடும்ப உற­வி­னர்­க­ளுக்­கி­டை­யி­லும் தர்க்­கம் ஏற்­பட்டு விவாகப் பதி­வா­ளர் தலை­யிட்டு சமா­தா­ன­மாக்கி அவர்­களை அனுப்­பி­வைத்­தார் என்று தெரிவிக்கப்பட்டது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like