தோழிகளின் மரணம்!! வெளிவரும் பகீர்க் காரணங்கள்?

கம்பஹா தரலுவ பகுதியின் புகையிரத தண்டவாளத்தில் தலையை வைத்து யுவதிகள் இருவர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளனர்.

இச்சம்பவம் நேற்றிரவு 8.45 அளவில் இடம்பெற்றதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

புறக்கோட்டையிலிருந்து பதுளை நோக்கி சென்ற புகையிரதத்திலேயே மேற்படி தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

மினுவங்கொடை பகுதியில் வசிக்கும் 21 வயதுடைய யுவதி ஒருவரும் நீர் கொழும்பு பகுதியை சேர்ந்த 22 வயதுடைய யுவதி ஒருவருமே தற்கொலை செய்துக்கொண்டுள்ளனர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தற்கொலை செய்துக்கொண்டவர்களில் யுவதி ஒருவரின் கையிலிருந்து கடிதம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதோடு, இரு கையடக்க தொலைபேசிகள், இரு பயணப்பொதிகள், கடவு சீட்டு மற்றும் திறப்பு ஆகியன சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த யுவதிகள் இருவரும் ஒரே ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரிபவர்கள் என தெரியவந்துள்ளது. யுவதிகளின் சடலம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அத்துடன், பணிபுரியும் இடத்தில் இருவருக்கும் பாலியல் தொல்லைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா அல்லது, வேறு ஏதேனும் காரணங்களாயென பொலிஸார் விசாரனைகளை முன்னெடுத்துள்ளனர்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like