சகல மின் பாவனையாளர்களுக்கும்…வடக்கில் இரு தினங்கள் மின் வெட்டு…

அனுராதபுரம், வவுனியா ஊடான பிரதான மின் விநியோக மார்க்கங்களில் அவசர திருத்தப் பணிகளை மேற்கொள்ள வேண்டியிருப்பதனால் வடக்கு மாகாணம் முழுவதிலும் எதிர்வரும் (14.07.2018, 15.07.2018 சனி, ஞாயிறு) ஆகிய இரு தினங்களிலும் காலை 8 மணி முதல் மாலை 05 மணி வரை மின் விநியோகம் முற்றாக துண்டிக்கப்படும் என இலங்கை மின்சார சபை இன்று அறிவித்துள்ளது.

வட மாகாணத்திலுள்ள வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மற்றும் யாழ்ப்பாணம், ஆகிய மாவட்டங்களிலேயே மின் விநியோகம் குறித்த இரு தினங்களிலும் முற்றாக துண்டிக்கப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

எனவே சகல மின் பாவனையாளர்களும் மின்வெட்டை கருத்தில் கொண்டு முன் ஆயத்த நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும், இதனால் மின் பாவனையாளர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு வருந்துவதாகவும் இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like