மன்னாரில் கரை ஒதுங்கிய அரியவகை விலங்கினம்!

தனுஷ்கோடி அருகே மன்னார் வளைகுடா கடல் பகுதியில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய இராட்சத டொல்பினை அதிகாரிகள் உடல் கூற்று பரிசோதனை செய்த நிலையில் புதைத்துள்ளனர்.

நேற்று தனுஷ்கோடி அருகே மிகுந்த ராயர் சத்திரம் கடல் பகுதியில் அரிய வகை கூன் முதுகு ஓன்கி இனத்தைச் சேர்ந்த டொல்பின் மீன் ஒன்று கண் பகுதியில் காயம் அடைந்து இறந்த நிலையில் நேற்று கரை ஒதுங்கியுள்ளது.

இதனை அடுத்து அப்பகுதி மீனவர்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் கரை ஒதுங்கிய டொல்பினை கால்நடை மருத்துவர் மூலம் உடற்கூற்று பரிசோதனை செய்து டொல்பினை புதைத்தனர்.

இவ்வகை டொல்பின்கள் பெரும்பாலும் ஆழ் கடலில் வசிப்பவை.


விசைப் படகுகள் மற்றும் பெரிய கப்பல்களில் அடிப்பட்டு டொல்பின் இறந்திருக்கலாம் அல்லது கடலில் வீசி எரியப்படும், பிலாஸ்டிக் வலைகளை சாப்பிட்டு இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

இந்த பெண் டொல்பின் சுமார் 50 கிலோ எடையும் 5 அடி நீளம் கொண்ட சுமார் 9 வயதுடையது எனவும் தெரிவிக்கப்படுகிறது.