வவுனியாவில் மாணவி எடுத்த விபரீத முடிவு! அதிர்ச்சியில் பெற்றோர்

வவுனியா – உக்கிளாங்குளம் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் பாடசாலை மாணவியின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.

இன்று காலை, குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உக்கிளாங்குளம் பகுதியில் வசித்து வந்த யோ.மிதுன்ஜா எனும் 17 வயது சிறுமியொருவர் உயத்தரத்தில் கல்வி பயின்று வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த புதன்கிழமை பாடசாலையில் இடம்பெற்ற உயர்தர மாணவர்களின் பிரியாவிடை நிகழ்வில் கலந்து கொண்டுள்ளார்.

அன்றிலிருந்து வீட்டில் மாணவியின் செயற்பாடுகளில் சற்று மாற்றம் ஏற்பட்டுள்ளது. அவர் மன அழுத்தத்தில் இருந்ததை அவதானிக்க முடிந்ததாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து நேற்று இரவு படுக்கைக்கு சென்ற குறித்த மாணவியை இன்று அதிகாலை 4 மணியளவில் தாயார் எழுப்புவதற்காக அறைக்கு சென்றுள்ளார்.

இதன்போதே மகள் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளதை தாயார் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதன்பின் சம்பவம் தொடர்பில் உறவினர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

எனினும் மாணவியின் இறப்புக்கான காரணம் தெரியவராத நிலையில், சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like