மூன்று வேளையும் மாட்டிறைச்சி மட்டும் சாப்பிடும் சிறுமியின் கண்ணீர்க்கதை

நோய் காரணமாக 9 வயதுடை சிறுமி ஒருவர் மூன்று வேளையும் மாட்டிறைச்சி மட்டுமே சாப்பிட்டு வாழ்ந்து வருகின்றார்.

தெஹியத்த கண்டிய பரஹஸ்வவ பிரதேசத்தில் இந்த சிறுமி வாழ்ந் வருகின்றார். இந்த சிறுமியின் நோய் நிலைமை தொடர்பாக அவரது தாய் வி.ஜீ. விஜேலதா வீரசிங்க கருத்து தெரிவிக்கையில்,

“என் மகள் மே 30ம் திகதி 2008ம் ஆண்டு பிறந்தார். குழந்தை பிறக்கும் போது மிகவும் நன்றாக இருந்தது. குழந்தையின் எடை மூன்றரை கிலோவாக இருந்தது.

பின்னர், இரண்டு நாட்களுக்கு பிறகு, நான் வைத்தியசாலையில் இருந்து வீட்டிற்கு திரும்பினேன். பிள்ளை நன்றாக பால் குடித்தது.

அதன்பின்னர் குழந்தையின் வயிறு வீங்க ஆரம்பித்தது. மற்ற குழந்தைகளைப் போன்று எனது குழந்தை மலசலம் கழிக்கவில்லை. இரண்டு மூன்று நாட்கள் அவ்வாறு இருந்தது.

ஒரு மாதம் வரை இந்த நிலை தொடர்ந்தது. பின்னர் மருத்துவரிடம் குழந்தையைக் காட்டினோம். சில நாட்கள் சென்ற பிறகு இந்த நிலை சரியாகிவிடும் என மருத்துவர் சொன்னார்.

ஆனால் அவ்வாறு நடக்கவில்லை. குழந்தையின் வயிறு உப்பியே காணப்பட்டது. நான் குழந்தையை பொலன்னறுவை பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்றேன்.

அங்கு பல பரிசோதனைகள் செய்த பின்னர் என் பிள்ளைக்கு நீரிழிவு நோய் இருப்பதாக மருத்துவர்கள் சொன்னார்கள். எனது குழந்தையை கொழும்பு சிறுவர் வைத்தியசாலைக்கு அனுப்புவதாக வைத்தியர் தெரிவித்தார்.

பிறகு என் குழந்தை கொழும்பு லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். குழந்தைக்கு தேவையான அனைத்து சிகிச்சைகளும் அளிக்கப்பட்டன.

அங்கிருந்த வைத்தியர்கள் மற்றும் தாதிமார்கள் எனக்கு உதவி செய்தார்கள். நான் குறித்த மருத்துவமனையில் நான்கரை ஆண்டுகள் எனது குழந்தையை வைத்திருந்தேன்.

பின்னர் வீட்டுக்குகொண்டு வந்தேன். குழந்தைக்கு , எழும்ப முடியாது நடக்க முடியாது வயிறுபெரிதாக இருந்தது. நாங்கள் பல வகையான உணவுகள் குழந்தைக்கு கொடுத்தோம்.

ஆனால் சாப்பாடு கொடுத்தவுடன் வாந்தி எடுப்பாள். இந்த நிலையில் ஒருநாள் நான் மாட்டிறைச்சி ஒரு துண்டு கொண்டுவந்து, அதனைச் அவளுக்கு சமைத்துக் கொடுத்தேன்.

நாங்கள் பௌத்தர்கள் எங்கள் வீட்டிற்கு மாட்டிறைச்சி கொண்டு வர மாட்டோம். சமைத்து சாப்பிட மாட்டோம். ஆனால் எனது குழந்தைக்காக இதனைச் செய்தேன்.

எனது மகள் அதைச் சாப்பிட்டதும் வாந்தி எடுக்கவில்லை. பிறகு தொடர்ந்து மாட்டிறைச்சி கொடுக்க ஆரம்பித்தோம். அதன் பிறகு மகள் எழுந்து நிற்க ஆரம்பித்தாள்.

இப்போது அவர் ஒன்பது வயதுடையவராக இருக்கிறார். எங்களுக்கு சில வேளை மாட்டிறைச்சி பெற போதிய பணம் இல்லாது இருந்தது. எவ்வாறெனினும் குழந்தைக்காக அதை வாங்கி சமைத்துக் கொடுத்தோம்.

இப்போது எனது மகள் நன்றாக இருக்கிறாள். பாடசாலைக்குச் சென்று வருகிறார்.

இந்த ஒன்பது ஆண்டுகளில் இந்த குழந்தைக்காக நான் படாத துன்பங்கள் இல்லை. என் குழந்தை ஆபத்தில் உள்ளது. இந்த குழந்தை இன்னும் உயிரோடு வாழ வேண்டுமென்றால், சிகிச்சை அளிக்க வேண்டும்.

எனினும் எனது குழந்தை தொடர்பாக உதவி செய்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

அதுபோல என் குழந்தை உயிரோடு இருப்பதற்கு யாராவது எனக்கு உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன் என அந்த தாய் கண்ணீருடன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.