யாழில் யாரையும் விட்டு வைக்காத கொழும்பில் இருந்து சென்ற பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவு

விஜயகலா மகேஸ்வரனின் உரை தொடர்பாக வடமாகாண முதலமைச்சர் உட்பட நிகழ்வில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊடகவியலாளர்களிடம் பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

முதலமைச்சர் உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்களை அவர்களது உத்தியோகபூர்வ இல்லங்களிலும், ஊடகவியலாளர்களை பொலிஸ் நிலையத்திலும் வைத்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் கடந்த 2 ஆம் திகதி நடைபெற்ற அரச நிகழ்வில் விடுதலைப் புலிகள் மீள் உருவாக்கம் தொடர்பாக விஜயகலா வெளியிட்ட கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனையடுத்து இராஜங்க அமைச்சர் பதவியையும் விஜயகலா இழந்தார்.