பொன்சேகாவுடன் பாதாள உலக கோஷ்டி; ஆதாரங்களோடு அம்பலப்படுத்தியது மஹிந்த அணி

வலுவாதார அபிவிருத்தி, வனஜீவராசிகள் மற்றும் பிரதேச அபிவிருத்தி அமைச்சர் சரத் பொன்சேகா, தனக்கு கீழ் 5 பாதாள உலகு குழு கோஷ்டியினரை வைத்து செயற்படுவதோடு, அவர்களை பாதுகாத்து வருவதாகவும் ஒன்றிணைந்த எதிரணி தெரிவித்துள்ளது.

பொரளையில் உள்ள என்.எம்.பெரேரா மத்திய நிலையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைத்த அந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பத்ம உதயசாந்த குணசேகர மேற்கண்டவாறு கருத்துரைத்தார்.

பாதாள உலகக் கோஷ்டி உறுப்பினர்களான முன்னாள் பொலிஸ் அதிகாரி அருன் அத்தநாயக்க, கியான் சந்தருவான், கிருஸ்டோபர் ஆகியோர் அமைச்சர் சரத்பொன்சேகா கலந்துகொள்ளும் நிகழ்வுகளில் அவருடன் கலந்துகொண்டிருப்பதாக கூறி அது தொடர்பான புகைப்படங்களையும் அவர் இதன்போது ஊடகங்களுக்கு வெளியிட்டிருந்தார்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like