சாவகச்சேரியில் ஆசிரியர் சடலமாக மீட்பு!!

சாவகச்சேரி அமிர்தாம்பிகை பாடசாலையின் ஆசிரியர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மருதடி வீதி சாவகச்சேரி வடக்கு மீசாலையைச் சேர்ந்த ஆசிரியரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

இவருக்கு 10 வருடமாக நீரிழிவு நோய் இருந்ததாகவும், கிட்னியும் செயலிழந்து சிகிச்சை செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

கடந்த புதன்கிழமை இறந்து கிடப்பதை பார்த்த உறவினர்களால், பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ததை அடுத்து சாவகச்சேரி நீதிவான் நீதிமன்ற நீதிவானின் பணிப்பின் பிரகாரம் திடீர் இறப்பு விசாரனை அதிகாரி சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணையை மேற்கொண்டார்.

சட்ட வைத்திய அதிகாரியின் மூலம் உடற் கூற்றுப் பரிசோதனையை நடாத்தி அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு இறப்பு விசாரணை அதிகாரியால் பொலிசாருக்கு உத்தரவிடப்பட்டது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like