மருதனார்மடம் பகுதியில் பெற்றோல் குண்டுத் தாக்குதல்

மருதனார்மடம் பகுதியில் தனியார் வைத்தியசாலை நடாத்தும் வைத்தியரின் உடுவில் பகுதியில் உள்ள வீட்டின் மீது நேற்று இரவு பெற்றோல் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் தந்தையார் படு காயமடைந்தார்.

உடுவில் பகுதியில் உள்ள குறித்த வைத்தியரின் வீட்டின் மீத்தே நேற்று இரவு 8 .30 அளவில் இரு மோட்டார் சைக்கிளில் வந்த்த இளைஞர்களால் மேற்படி பெற்றோல் குண்டு வீசப்பட்டுள்ளது.இதன்போது பெற்றோல் குண்டு பாரிய சத்தத்துடன் வெடித்துள்ளது. குறித்த சத்தத்தினால் பிரதேசத்தில் பெரும் பதற்றம் நிலவியது.

குறித்த குண்டுத் தாக்குதலின்போது வீட்டில் நின்ற வைத்தியரின் தந்தை வயிற்றுப் பகுதியில் காயமடைந்தார். குறித்த சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிசாருக்கு முறையிட்டதனையடுத்து பொலிசார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து மேலதிக விசாரணைகளில் ஈடு பட்டனர்.

மேற்படி சம்பவம் தொடர்பில் பொலிசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றபோதும் எவரும் கைது செய்யப்படவில்லை. –

Get real time updates directly on you device, subscribe now.

You might also like