இலங்கை மக்களுக்கு முன்னூதாரணமாக திகழும் மனிதாபிமானமுள்ள நபர்!!

இலங்கையில் பாடசாலை மாணவர்களுக்காக இலவச போக்குவரத்து சேவையை நடத்தி வரும் நபர் தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது.

அவிசாவளை, தெரணியகல பகுதியை சேர்ந்த சரத் வசந்த என்பவரே மகத்தான பணியை செய்து வருகின்றார். உயிரிழந்த தனது பெற்றோரின் நினைவாக இந்த சேவையை நடத்தி வருவதாக சரத் வசந்த தெரிவித்துள்ளார்.

தான் கல்வி கற்ற பாடசாலைக்கு பேருந்து ஒன்றை கொள்வனவு செய்து கொடுக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. அதற்கமைமைய கடனுக்கு பேருந்து ஒன்றை கொள்வனவு செய்து, மாணவர்களுக்காக இலவச போக்குவரத்து சேவையை நடத்தி வருகிறார்.

பாடசாலை நாட்களிலும் காலை 7.15 மணியளவில் பேருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டு மாலையில் இந்த சேவை நிறைவு செய்யப்படும். பேருந்து முழுவதும் மாவணர்கள் ஏற்றப்படுவார்கள். அவர்களுக்கு இலவச சேவை மாத்திரமே முன்னெடுக்கப்படுகின்றது. அத்துடன் வருடத்திற்கு ஒரு முறை தனது செலவில் கிராம மக்கள் அனைவரையும் கதிர்காமத்திற்கு அவர் அழைத்து செல்வார்.

சரத் வசந்தவினால் நடத்தப்படும் உணவகத்தில் கிடைக்கும் வருமானத்தை கொண்டு இந்த சேவையை செய்து வருகிறார்.

எனது உணவகத்திலும், மரக்கறி உணவுகள் மாத்திரமே வழங்கப்படுகின்றது. நான் இவை அனைத்தையும் மகிழ்ச்சியுடனே செய்து வருகின்றேன்.

இலட்சம், கோடி கணக்கில் சம்பாதித்து விட்டு உயிரிழக்கும் போது ஒன்றையும் கொண்டு செல்வதில்லை. மேலும் இலவச போக்குவரத்து சேவையை தொடர்ந்து செய்து வருவேன் என சரத் வசந்த மேலும் தெரிவித்துள்ளார்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like