யாழ்ப்பாணத்தில்- பல்­வேறு இடங்­க­ளில் -வாள்­வெட்­டுக் குழு அட்­ட­கா­சம்!!

யாழ்ப்­பா­ணத்­தின் பல பகு­தி­க­ளில் நேற்று இரவு வாள்­வெட்­டுக் குழு­வி­னர் பெரும் அட்­ட கா­சத்­தில் ஈடு­பட்­ட­னர். சுமார் இரண்டு மணி நேரத்­தில் அடுத்­த­டுத்து அவர்­கள் கொள்­ளை­யி­லும் வழிப்­ப­றி­யி­லும் தாக்­கு­த­லி­லும் ஈடு­பட்­டு­விட்­டுப் பொலி­ஸா­ரி­டம் பிடி­ப­டா­மல் தப்­பி­யோடி உள்­ள­னர்.

மானிப்­பா­யில் இருந்து அரி­யாலை வரை இவர்­க­ளு­டைய அட்­ட­கா­சம் பதி­வா­கி­யது.

யாழ்ப்­பா­ணக் குடா­நாட்­டில் தொடர்ச்­சி­யா­கவே வாள்­வெட்­டுக் குழு­வி­னர் என்று தெரி­விக்­கப்­பட்டு பலர் பொலி­ஸா­ரால் கைது செய்­யப்­பட்டு சிறை­யில் அடைக்­கப்­பட்டு வரும் நிலை­யில் நேற்று இரவு அவர்­க­ளு­டைய அட்­ட­கா­சம் யாழ்ப்­பா­ணத்­தில் எல்லை மீறி­யது.

சிறிய வர்த்­த­கர்­களை இலக்கு வைத்து அவர்­களை மிரட்­டிக் கப்­பம் பெற்­றுள்­ள­னர். மானிப்­பா­யில் ஆரம்­பித்த இந்­தக் கொள்ளை அரி­யாலை வரை நீடித்­துள்­ளது என்று தெரி­விக்­கப்­பட்­டது.

நான்கு மோட்­டார் சைக்­கிள்­க­ளில் மழை அங்கி அணிந்­த­வா­றும், முகத்தை மூடிக்­கட்­டி­ய­வ­வா­றும் வந்த 6பேரே இந்­தப் பாத­கச் செய­லில் ஈடு­பட்­ட­னர். வர்த்­தக நிலை­யங்­களை மூடும் நேரம் உள்­பு­குந்து உரி­மை­யா­ளர்­கள் மிரட்­டப்­பட்­டுள்­ள­னர்.

மானிப்­பா­யில் வீதி­யில் சென்ற ஒரு­வ­ரி­டம் இந்­தக் கும்­பல் தங்­கச் சங்­கி­லியை அறுத்­துச் சென்­றது. வர்த்­த­கர்­கள் சிலரை மிரட்­டிப் பணம் பறித்­த­னர்.

அதை­ய­டுத்து கோண்­டா­வி­லி­லும் வீதி­யில் சென்ற ஒரு­வ­ரி­டம் வாள்­க­ளைக் காட்டி மிரட்டி சங்­கிலி பறித்­த­னர்.

தொடர்ந்து யாழ்ப்­பா­ணம் முட­மா­வ­டிச் சந்­தி­யில் உள்ள வர்­த­கர் ஒரு­வ­ரி­டம் சுமார் 25 ஆயி­ரம் ரூபா பணம் கொள்­ளை­ய­டிக்­கப்­பட்­டுள்­ளது, நேற்று முழு­வ­தும் வியா­பா­ரம் செய்த பணம் அப்­ப­டியே கொள்­ளை­யி­டப்­பட்­ட­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

சிறிது நேரத்­தி­லேயே அரி­யாலை புங்­கன்­கு­ளம் பகு­தி­யில் உள்ள வர்­தக நியை­யத்­தில் புந்த குழும்­பல் அங்­கும் பணத்­தைக் கொள்­ளை­ய­டித்­துச் சென்­றுள்­ளது. அங்­கி­ருந்த இளை­ஞர்­க­ளுக்­கும் குறித்த வாள்­வெட்­டுக் கும்­ப­லுக்­கு­மி­டையே மோதல் ஏற்ப்­பட்­டது.

இதில் சில இளை­ஞர்­கள் காய­ம­டைந்­த­னர். தொடர்ந்து தெல்­லிப்­ப­ழை­யில் உள்ள வீடு ஒன்­றுக்­குள் புகுந்த கும்­பல் அங்­கி­ருந்த பெண்ணை வாளி­னால் வெட்­டிக் காயப்­ப­டுத்த முயன்­றது. ஆனால் அவர் சம­யோ­சி­த­மா­கத் தப்­பி­னார்.

எனி­னும் வீட்­டி­லி­ருந்த மற்­றும் இரு­வ­ருக்கு கேபிள்­க­ளால் தாக்­கி­யத்­தில் அவர்­கள் காய­ம­டைந்­த­னர். அய­ல­வர்­கள் ஒன்­று­கூ­டி­ய­தும் வாள்­வெட்­டுக் கும்­பல் அங்­கி­ருந்து தப்­பி­யோ­டி­யது. ஓடும்­போது ஒரு வாளை­யும் கைவிட்­டுச் சென்­றுள்­ளது.

அந்த வீட்­டி­லி­ருந்த ஜன்­னல் கண்­ணா­டி­களை அடித்து நொருக்­கி­ய­து­டன் மோட்­டார் சைக்­கிள்­கள் மற்­றும் பொருள்­க­ளை­யும் அடித்­துச் சேத­மாக்­கி­யுள்­ளது.

சம்­ப­வங்­கள் தொடர்­பில் யாழ்ப்­பா­ணப் பொலி­ஸா­ருக்கு அறி­விக்­கப்­பட்­டது. அனைத்­தும் நறை­வ­டைந்த பின்­னர் அவர்­கள் சம்­பவ இடங்­க­ளுக்­குச் சென்­ற­னர். இங்கு விசா­ர­ணை­களை மேற்­கொண்­ட­னர். எனி­னும் நள்­ளி­ரவு வரை எவ­ரும் கைது செய்ய்­ப­ப­ட­வில்லை.

யாழ்ப்­பா­ணத்­தில் வாள் வெட்­டுக் குழு­வி­ன­ரு­டைய அட்­ட­கா­சம் அதி­க­ரித்­தி­ருப்­பதை அடுத்து அண்­மை­யில் சட்­டம் ஒழுங்கு அமைச்­சர், பொலிஸ் மா அதி­பர் ஆகி­யோர் நேரில் இங்கு வருகை தந்து நிலமை குறித்து நேரில் ஆராய்ந்து சென்­ற­னர். அதன் பின்­னரே இந்த அட்­ட­கா­சம் இடம்­பெற்­றுள்­ளது.