கோர விபத்தில் ஒருவர் பலி – தப்பியோடிய சாரதி – பொலிஸாரை துரத்தி துரத்தி தாக்கிய பொதுமக்கள்!

தம்புள்ளையில் சொகுசு கார் ஒன்றுக்கு தீ வைக்க சென்றவர்களை தடுக்க சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் மீது கூர்மையான ஆயுதத்தினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தாக்குதலுக்குள்ளான பொலிஸ் கான்ஸ்டபிள் தம்புள்ளை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.தம்புளை – ஹபரன பிரதான வீதியின் பல்வெஹேர பிரதேசத்தில் நேற்று இரவு 8.30 மணியளவில் மோட்டார் சைக்கிள் மற்றும் சொகுசு கார் ஒன்று மோதியமையினால் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் உயிரிழந்துள்ளார்.விபத்தின் பின்னர் கோபமடைந்த பிரதேச மக்கள் விபத்தை ஏற்படுத்திய சொகுசு காருக்கு தீ வைக்க முயற்சித்துள்ளனர்.

விபத்தில் பல்வெஹேர பிரதேசத்தை சேர்ந்த 38 வயதான அஷோக் லால் என்ற 3 பிள்ளைகளின் தந்தை ஒருவரே உயிரிழந்துள்ளார்.சொகுசு கார் தம்புளை பிரதேசத்தில் இருந்து சீகிரிய பிரதேசத்தை நோக்கி பயணித்துள்ள நிலையில், மோட்டார் சைக்கிள் எதிர்பக்கத்தில் பக்கத்தில் இருந்து திருப்பும் போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக விசாரணை மேற்கொண்ட பொலிஸார் தெரிவித்துள்ளர்.

விபத்தை தொடர்ந்து அந்த இடத்தில் கூடிய பிரதேச மக்கள் கோபமாக நடந்து கொண்டுள்ளனர். கார் ஓட்டிய சாரதி அந்த இடத்தில் இருந்த சிலரின் உதவியுடன் தம்புள்ளை பொலிஸ் நிலையத்திற்கு சென்று சரணடைந்துள்ளார்.

பொலிஸ் கான்ஸ்டபிள் மீது கத்தியால் தாக்குதல் மேற்கொண்டு காயமேற்படுத்திய சந்தேக நபர்கள் குறித்த பிரதேசத்தை விட்டு தப்பி சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளர்.அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Get real time updates directly on you device, subscribe now.