யாழ்ப்பாணக் கல்லூரியில் நிர்வாக சீர்கேடுகள்- மாணவர்களை ஒன்றிணையக் கோரிக்கை!!

கல்லூரி தாயை மீட்டெடுக்க பழைய மாணவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என்று யாழ்ப்பாண கல்லூரியின் பழைய மாணவனும் ஆதின சபையை சேர்ந்தவரும் சட்டத்தரணியுமான க.சுகாஸ் அழைப்பு விடுத்துள்ளார்.

யாழ்ப்பாண கல்லூரியில் நிர்வாக சீர்கேடுகள் , அதிகார துஸ்பிரயோகங்கள் இடம்பெறுவதாக குற்றம் சாட்டி பழைய மாணவர்கள் கல்லூரி முன்றலில் இன்று போராட்டம் ஒன்றினை முன்னெடுத்து இருந்தனர்.

குறித்த போராட்டத்தின் முடிவில் , ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே போதே சுகாஸ் அவ்வாறு தெரிவித்தார். அவர் தெரிவித்ததாவது,

நிர்வாக சீரின்மை, ஆதினத்தின் அளவு கடந்த தலையீடு , பாடசாலை நிர்வாகத்தின் செயற்திறன் அற்ற தன்மை , ஆசிரியர்களை உள்வாங்கும் போது வெளிப்படை த்தன்மை இல்லாமை, தகுதியான ஆசிரியர்கள் உள்வாங்கப்படமை , விளையாட்டு துறை செயலிழந்து விட்டது, துடுப்பாட்ட போட்டிகள் நடைபெறுவதில்லை, சில ஆசிரியர்கள் அடவாடியாக சண்டித்தனமாக நடந்து கொள்கின்றனர்.

அதனால் மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக இருக்கிறன்றது. இவ்வாறாக பல அராஜகங்கள் பாடசாலையில் நடைபெறுகின்றது.

இதனை நாங்கள் தொடர்ந்து அனுமதித்தால் எமது கல்லூரி தாய்க்கு நாங்கள் செய்யும் துரோகம் ஆகும். அதனால் நாங்கள் இன்று வீதிக்கு இறங்கி உள்ளோம்.

ஆளுனர் சபை கூட்டத்தில் கதைக்கப்படுவது ஒன்று எடுக்கப்படும் முடிவு வேறு ஒன்று கடந்த கூட்டத்தில் யாழ்ப்பாண கல்லூரிக்கு சொந்தமான தொழிநுட்ப கல்லூரியை பன்னாட்டுப் பாடசாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்க போவதாக தீர்மானித்தார்கள். பழைய மாணவர்களுடன் கதைக்காது தாங்களே முடிவெடுத்துள்ளனர்.

கல்லூரிக்காக தான் ஆளுனர் சபை இருக்க வேண்டும். ஆதினத்தின் அளவு கடந்த தலையீடுகள் நிறுத்தப்பட வேண்டும். கல்லூரியின் தர்மகர்த்த சபையால் கோரிக்கை விடப்ப்பட்டு உள்ளது தற்போது உள்ள ஆளுனர் சபை கலைக்கப்பட வேண்டும் என அதன் தலைவர் , உப தலைவர் விலக வேண்டும் என கோரியுள்ளனர்.

கடந்த ஆண்டு உடுவில் மகளீர் கல்லூரி மாணவிகள் இட்ட தீ தான் இன்று நெருப்பாக எரிகின்றது. எங்களின் கல்லூரி தாயை மீட்டு எடுக்க பழைய மாணவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும்.

கல்லூரி நிர்வாகம் உடனடியாக தமது நிர்வாகத்தை சீர் செய்து வினைத்திறனுடன் செயற்பட வேண்டும். இல்லை எனில் நாம் தொடர் போராட்டத்தை முன்னெடுப்போம் எனத் தெரிவித்தார்.