மன்னாரில் தோண்டும் இடமெல்லாம்- எலும்பும், சட்டி பானைகளும்- மக்கள் கருத்து!!

மன்னாரில் மண் தோண்டும் இடமெல்லாம் எலும்புக் கூடுகளும், சட்டி பானைகளும் வெளிவருவதால், புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணி தொடர்பில் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

நகர அபிவிருத்தி அமைச்சினால் 180 மில்லியன் ரூபா செலவில் மன்னார் நகர மத்தியில் அமைக்கப்பட இருக்கும் புதிய பேருந்து தரிப்பிடடத்துக்கு அடிக்கல் நடப்பட்டது. அதனைத் தொடர்ந்து அங்கு அத்திபாரங்கள் கட்டுவதற்கான கிடங்குகள் வெட்டும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் மக்களிடம் கருத்துக் கேட்ட போது,
”தேவை இல்லாமல் கண்ட இடங்களில் ஆழமாக தோண்டுவதை நிறுத்த வேண்டும். ஏனெனில் மன்னாரில் மண் தோண்டும் இடமெல்லாம் எலும்புக் கூடுகளும் சட்டி பானைகள் வருவது வழக்கம். பேருந்து தரிப்பிடத்திலும் அப்படி ஏதேனும் பொருள்கள் வெளி வந்தால் அவ்வளவு தான். தொல்பொருள் திணைக்களம் அபிவிருத்திப்பணியை நிறுத்திவிடும். இந்த விடயத்தில் அவதானமாக செயற்பட வேண்டும்” என்று மக்கள் தெரிவிக்கின்றனர்.