15 ஆண்டுகளாக கொள்ளையடித்த இலங்கை அகதி : தமிழகத்தின் பிரபல நகை அடகு கடை முதலாளிக்கு பொலிஸார் வலைவீச்சு!!

திருட்டு நகைகளை வாங்கிய குற்றத்திற்காக தமிழகத்தின் பிரபல நகை அடகு கடை முதலாளிக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், அவரை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக பாரிய திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இலங்கை அகதி முகாமை சேர்ந்த தம்பதியினரை தமிழக பொலிஸார் அண்மையில் கைது செய்திருந்தனர்.

அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது பல்வேறு திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டிருந்தனர்.

இதன்படி, கொள்ளையடிக்கும் நகைகளை தமிழகத்தின் பிரபல அடகு கடையில் விற்பனை செய்து வந்துள்ளமை பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

நகைகளை விற்பனை செய்தமைக்கான பற்றுச்சீட்டுகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இதனையடுத்து, குறித்த அடகு நகை கடையின் மேலாளர், நகை மதிப்பீட்டாளர் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தற்போது திருட்டு நகைகளை குற்றத்திற்காக குறித்த அடகு கடையில் முதலாளிக்கு எதிராக வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் அவரை தீவிரமாக தேடி வருவதாக தமிழக ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Get real time updates directly on you device, subscribe now.

You might also like