கடற்­பா­றை­யில் நின்று செல்பி எடுத்த மாண­வியை காவு­கொண்­டது கட­லலை : பிறந்த நாளன்று அவ­லம்

மாத்­த­றை­யில் 11 வயது மாண­வி­யொ­ரு­வர் கட­லில் மூழ்கி உயி­ரி­ழந்­தார்.சக மாண­வி­க­ளு­டன் கடற்­க­ரைப் பாறை­யில் நின்று செல்பி எடுத்­துக்­கொண்­டி­ருந்­த­போது கட­லலை வீசி­ய­தால் நீரில் இழுக்­கப்­பட்டு மூழ்கி உயி­ரி­ழந்­தார் என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

அவ­ரது பிறந்த தினத்தில்­தான் சம்­ப­வம் நடை­பெற்­றது என்று விசா­ர­ணை­ யில் உற­வி­னர்­கள் தெரி­வித்­த­னர்.

மாத்­தறை, கந்­தர பிர­தே­ சத்­தில் நேற்­று­முன்­தி­னம் சம்­ப­வம் இடம்­பெற்­றது. நுகே­கொட, கங்­கொ­ட­வில பிர­தே­சத்­தைச் சேர்ந்த ருஸ்தி தரு­மினி ஜய­சிங்க என்ற மாண­வியே இவ்­வாறு உயி­ரி­ழந்­தார். தமிழ் – சிங்­கள புத்­தாண்­டைக் கொண்­டாட அவர் தனது உற­வி­னர் வீடொன்­றுக்கு சென்­றுள்­ளார். பின்­னர் நண்­பி­க­ளு­டன் இணைந்து மாணவி கடற்­க­ரைக்­குச் சென்­றுள்­ளார்.

இவ­ரு­டன் 7 பேர் அதே கடற்­பா­றை­யின் மீது நின்று செல்பி எடுத்­துள்­ள­னர். திடீ­ரென வந்த பெரிய அலை­யொன்­றால் அவர் கள் கட­லுக்­குள் அள்­ளுண்டு சென்­றுள்­ள­னர். 6 பேர் சிறு­கா­யங்­க­ ளு­டன் தப்­பிக் கரை­சேர்ந்­த­போ­தும் குறித்த மாணவி நீரில் மூழ்கி உயி­ரி­ழந்­தார்” என்று பொலி­ஸார் மேலும் தெரி­வித்­த­னர்.