மின்மானி வாசிப்பாளர் உரிய காலம் உங்கள் வீட்டுக்கு வரவில்லையா! எச்சரிக்கை

மின்மானி வாசிப்பாளர் உரியநேர காலம் உங்கள் வீட்டுக்கு வரவில்லையா நீங்கள் பணத்தை இழந்துகொள்வேர்கள் எப்படி? ???

மின்மானி உரியநேரம் மின்சாரசபை மின்மானி பரிசோதனையாளரால் பரிசோதிக்கவில்லையாயின் இழக்கப்படும் பண விரயம் ஏறாவூரில் நடைபெற்ற சம்பவம் இது உங்களுக்கும் நல்லதொரு உதாரணம் எதிர்காலம் இனி அவதானம் செலுத்துவதற்காகும்.

ஏறாவூரிலுள்ள வீடுகளிலோ அல்லது கடைகளிலோ
மாதமொருமுறை உங்கள் காலடிக்கு வந்து மின்மானி வாசிப்பை எழுதி, பற்றுச்சீட்டு தரும்போது கவனமாக பரிசீலித்து வாங்குங்கள்.

பொதுமக்களின் பணத்தை அரசுக்கு வேண்டுமென்றே பெற்றுக் கொடுக்கும் சதியினை புதிதாக CEB மின்மானி வாசிப்போராக கடமையாற்றும் நபர்கள் மேற்கொள்கிறார்களோ என்று எண்ணத்தோன்றுகிறது.

90 யுனிற் மீற்றர்ஓடினால் 700/= ரூபா வரும்போது, அது 91 ஐ அடைந்தால் 1400/= ரூபா ஆகிடுமே என்பது தெரியுமா? நம் மக்களுக்கு.

சென்ற 23/06/அன்று வந்த மின்மானி வாசிப்பாளர் இம்மாதம் 23/07 யில் வந்திருப்பாரென்றால் 89 யுனிற்றுக்குத்தான் பணம் கட்டியிருப்பார்.
ஆனால் ஒரு நாள் பிந்தி வருவதால் 92 யுனிற்றுக்கு இரண்டு மடங்காக பணம் செலுத்த வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாக்கியிருக்கிறார்.

வேண்டுமென்றே கூடுதலான மீற்றர் வாசிப்பை எழுதிக் கொடுத்துவிட்டு, அடுத்தமாதம் வரும்போது ஏற்கனவே கூட்டி எழுதிய மீற்றர் வாசிப்புக்கே மின்மானி காட்டாததால், வீடு பூட்டப்பட்டுள்ளது என்று எழுதி 30/= ரூபா மட்டும் பில் கொடுத்துமிருக்கிறார்கள்.

இது பொதுமக்களுக்கு இழைக்கப்படும் அநீதி இல்லையா?

அது மாத்திரமின்றி மின்மானி வாசிப்பாளர் உங்கள் வீடுகளுக்கு வந்து மின்மானி பற்றுச்சீட்டை தரும்போது, சமூகமளித்த நாளுக்குரிய் திகதி குறிப்பிடப்பட்டு, மானியின் இலக்கமும் சரியாக எழுதியிருக்கின்றாரா என்று கட்டாயம் பாருங்கள்.

அதிலும் பல இடங்களில் குளறுபடி நடந்திருப்பதை அறிந்திருக்கிறேன்.

இவ்வாறான மின்மானி வாசிப்பாளர்களினால் பொதுமக்களின் பணம் வீணடிக்கப்படுவதை காண்கிறேன்.

இவற்றையெல்லாம், எங்கட அரசியல் தலைமைகளும், அதிகாரிகளும் ஒன்று சேருகின்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்திலாவது கதைத்து தீர்வை பெற்றுக்கொடுக்கலாமென்றால்,
அக் கூட்டத்திற்கு நஸீர் ஹாஜியை அழைக்கக்கூடாது என்ற நிர்பந்தம் வேற.

அரச அதிகாரரிகளால் உத்தியோகத்தர்களால் பொதுமக்கள் எதிர்க்கொள்ளும் பிரச்சினைகளை, தெரிவுசெய்யப்பட்ட உள்ளூராட்சி உறுப்பினர்களாவது பயமின்றி மக்களுக்காக கதைத்து பயனை பெற்றுக்கொடுங்கள்.
அரசியல் தலைமைகளின் கூஜா தூக்கியாக மாத்திரம் இருக்காதீர்கள்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like