இன்றைய ராசிபலன் 29-07-2018

மேஷம்: தாய்வழி உறவில் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். வாழ்க்கைத்துணை உங்கள் முயற்சிக்கு ஒத்துழைப்புத் தருவார். அவர்மூலம் உங்களுக்குத் தேவையான உதவிகளும் கிடைக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக இருக்கும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும்.
ரிஷபம்: சகோதரர்கள் கேட்கும் உதவியைச் செய்வீர்கள். மாலையில் உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். புதிய டிசைனில் ஆடைகள் வாங்கும் வாய்ப்பு ஏற்படும். உடல் ஆரோக்கியம் மேம்படும். நண்பர்கள் உதவி கேட்டு வருவார்கள். வியாபாரத்தில் பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். லாபம் எதிர்பார்த்தபடியே இருக்கும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் குடும்பத்துடன் கோயில்களுக்குச் செல்லும் வாய்ப்பு ஏற்படும்.
மிதுனம்: திடீர் செலவுகள் ஏற்படும். தேவையான பணம் இருப்பதால் சமாளித்துவிடுவீர்கள். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். பிள்ளைகளுக்காக செலவு செய்யவேண்டி வரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் இருந்தாலும் பணியாளர்களால் சிறுசிறு சங்கடங்களும் ஏற்படக்கூடும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயணங்களின்போது எச்சரிக்கையாக இருக்கவும்.
கடகம்: மனதில் இனம் தெரியாத சோர்வு ஏற்படக்கூடும். வாழ்க்கைத்துணை வழியில் செலவுகள் ஏற்படும். எதிர்பார்த்த பணம் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். உடல்நலனில் கவனம் தேவை. உங்கள் தேவையை அறிந்து மற்றவர்கள் உதவி செய்வார்கள். வியாபாரத்தில் விற்பனையை அதிகரிக்க கூடுதலாக உழைக்கவேண்டி இருக்கும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும்.
சிம்மம்: காரியங்களில் அனுகூலம் உண்டாகும் நாள். தந்தை வழியில் ஆதாயம் கிடைப்பதுடன் செலவுகளும் ஏற்படும். இளைய சகோதரர்களால் அனுகூலம் உண்டாகும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். சிலருக்கு பணியின் காரணமாக வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும். வியாபாரத்தில் பாக்கித் தொகை வசூலாகும். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும்..
கன்னி: சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பு ஏற்படும். எதிர்பாராத பணவரவும், திடீர் செலவுகளும் ஏற்படக் கூடும். ஆனால், புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். வியாபாரத்தில் வழக்கமான நிலையே காணப்படும். பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்பார்கள். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் வகையில் ஆதாயம் உண்டாகும்.
துலாம்: புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். ஆனால், உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிள்ளைகளால் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். சிலருக்குக் குடும்பம் தொடர்பான வேலையை முன்னிட்டு வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகமாக இருப்பது உற்சாகம் தரும். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.
விருச்சிகம்: மகிழ்ச்சியான நாள். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். பிற்பகலுக்கு மேல் உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உண்டாகும். சுபநிகழ்ச்சி தொடர்பான முயற்சியை இன்று தவிர்க்கவும். திடீர் செலவுகளால் கடன் வாங்கவும் நேரிடும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் திடீர் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.
தனுசு: மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். நீண்டநாள்களாக எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைப்பதுடன், அவர்களால் ஆதாயமும் கிடைக்கும். நண்பர்கள் உதவி கேட்டு வருவார்கள். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் பணியாளர்களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்கவேண்டி இருக்கும். மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.
மகரம்: தாயின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். பிள்ளைகளின் தேவைகளை மகிழ்ச்சியுடன் நிறைவேற்றுவீர்கள். சிலருக்கு திடீர் பணவரவுக்கும், திடீர் செலவுகளுக்கும் வாய்ப்பு உண்டு. குடும்ப விஷயமாக சிலருக்கு வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரும். வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். பங்குதாரர்களால் ஆதாயம் உண்டாகும். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் செலவுகள் ஏற்படக்கூடும்.
கும்பம்: புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் தொடங்குவது சாதகமாக முடியும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். எதிரிகள் வகையில் எச்சரிக்கையாக இருக்கவும். வீண் அபவாதம் ஏற்படக்கூடும். மாலையில் சோர்வு நீங்கி உற்சாகம் பெறுவீர்கள். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் பிரச்னை ஏற்படக்கூடும். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டு.
மீனம்: செயல்படவேண்டிய நாள். மற்றவர்களுடன் பேசும்போது வீண் மனவருத்தம் ஏற்படும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிக்கவும். வாழ்க்கைத் துணையின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். சகோதரர்களால் அனுகூலம் ஏற்படும். எதிர்பார்த்த பணம் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் அனுசரணையாக நடந்துகொள்வது நல்லது. உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும்.