இன்றைய ராசிபலன் 31-07-2018

மேஷம்: உற்சாகமான நாள். புதிய முயற்சியை காலையிலேயே தொடங்குவது சாதகமாக முடியும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. வாழ்க்கைத்துணையிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். சிலருக்கு அலுவலகப் பணியின் காரணமாக வெளியூர்களுக்குச் செல்ல நேரிடும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சி தரும் சம்பவம் நடக்கும்.
ரிஷபம்: அதிகாரிகளின் சந்திப்பும், அவர்களால் காரிய அனுகூலமும் உண்டாகும். தாயிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சகோதர வகையில் சிறு சிறு சங்கடங்கள் ஏற்படுவதுடன், அவர்களுக்காக பணம் செலவு செய்ய நேரிடும். கணவன் – மனைவிக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டாலும் அதனால் பாதிப்பு எதுவும் இருக்காது. அலுவலகத்தில் சக பணியாளர்கள் உங்கள் பணிகளில் உதவி செய்வார்கள். வியாபாரம் எப்போதும்போல் நடைபெறும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்கக் காரியங்களில் அனுகூலம் உண்டாகும்.
மிதுனம்: மனதில் தெய்வபக்தி அதிகரிக்கும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். மற்றவர்களுடன் பேசும்போது வீண் மனவருத்தத்தைத் தவிர்க்க பொறுமையைக் கடைப்பிடிக்கவும். மாலையில் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். சிலருக்கு புதிய நண்பர்களின் அறிமுகமும், அவர்களால் ஆதாயமும் உண்டாகும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் விற்பனை சற்று சுமாராகத்தான் இருக்கும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் ஏற்படக்கூடும்.
கடகம்: புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். சிலருக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். பிற்பகலுக்கு மேல் உறவினர்கள் வகையில் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிக்கவும். சிலருக்கு எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் பணிகளில் கவனம் தேவை. வியாபாரத்தில் விற்பனை எதிர்பார்த்தபடியே இருக்கும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் செலவுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.
சிம்மம்: உற்சாகமான நாளாக அமையும். எதிர்பார்க்கும் காரியங்கள் சாதகமாக முடியும். உறவினர் அல்லது நண்பர் வீட்டு விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். முக்கியப் பிரமுகர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும்.வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுடன் திடீர் செலவுகளும் ஏற்படும்.
கன்னி: பணப்புழக்கம் அதிகரிக்கும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். உறவினர்களிடம் இருந்து எதிர்பார்த்த நல்ல தகவல் உங்களுக்குக் கிடைப்பதால் மகிழ்ச்சி உண்டாகும். அலுவலகத்தில் சக பணியாளர்கள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். எதிர்பார்த்த சலுகை கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் பங்குதாரர்களால் எதிர்பாராத நல்ல திருப்பம் ஏற்படக்கூடும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பயணங்களால் உடல் அசதி உண்டாகக்கூடும்.
துலாம்: புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். சிலருக்குக் குடும்ப விஷயமாக வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும். பிள்ளைகளால் சிறு சிறு பிரச்னைகள் ஏற்படக்கூடும். பொறுமை அவசியம். பிற்பகலுக்கு மேல் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் மறைமுகத் தொல்லைகள் ஏற்படக்கூடும்.. விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும்.
விருச்சிகம்: இன்றைக்கு புதிய முயற்சிகளில் ஈடுபடாமல் வழக்கமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். பிற்பகலுக்கு மேல் உறவினர்கள் வருகையால் செலவுகளுடன் சில சங்கடங்கள் ஏற்படும். உடல் நலனில் கவனம் தேவை. வாழ்க்கைத்துணை வழி உறவுகள் உதவி கேட்டு வருவார்கள். அலுவலகத்தில் உங்கள் பணிகளில் கூடுதல் கவனம் தேவைப்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியூர்ப் பயணங்களைத் தவிர்த்துவிடுவது நல்லது.
தனுசு: தாய்மாமன் வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். அரசாங்கக் காரியங்கள் முடிவதில் சிறு தடை ஏற்படக்கூடும். மாலையில் மனதுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். இளைய சகோதர வகையில் அனுகூலம் உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும், சக பணியாளர்களின் உதவியுடன் செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போலவே காணப்படும். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.
மகரம்: இன்றைக்கு வழக்கமான பணிகளில் மட்டும் ஈடுபடவும். தந்தை வழி உறவினர்களால் செலவுகள் ஏற்படக்கூடும். சகோதரர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்றுக்கொள்வார்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. வெளியூரில் இருந்து வரும் செய்தி உங்கள் முன்னேற்றத்துக்கு உதவுவதாக இருக்கும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். வியாபாரத்தில் போட்டியாளர்களின் தொல்லைகளைச் சமாளிப்பீர்கள். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திடீர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும்.
கும்பம்: உற்சாகமான நாள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். சகோதரர்கள் கேட்கும் உதவியைச் செய்வீர்கள். உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். மாலையில் நண்பர்களின் சந்திப்பு மனதுக்கு உற்சாகம் தரும். குடும்பத்துடன் கோயிலுக்குச் சென்று வருவீர்கள். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டு. அலுவலகத்தில் சக பணியாளர்கள் இணக்கமாக நடந்துகொள்வார்கள். வியாபாரம் வழக்கம்போலவே காணப்படும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.
மீனம்: தேவையான பணம் இருந்தாலும் தேவையற்ற செலவுகளும் ஏற்படக்கூடும். உறவினர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும். சகோதர வகையில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும் என்றாலும், அதனால் பாதிப்பு எதுவும் இருக்காது. நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் உண்டாகும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிப்பதால், மனதில் சோர்வு உண்டாகும். வியாபாரத்தில் பணியாளர்களால் செலவுகள் ஏற்படக்கூடும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.