25 அத்தியாவசிய மருந்துப் பொருட்களின் விலைகள் மிக விரைவில் குறைப்பு…!!

மேலும் அத்தியவசிய மருந்துகள் 25 இன் விலைகளை உடனடியாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அதற்கமைய ஏற்கனவே விலை குறைக்கப்பட்ட மருந்துகள் தவிர்ந்த, மேலும் 15 அத்தியாவசிய மருந்துகள் மற்றும் விலை உயர்ந்த புற்றுநோய் மருந்துகள் 10 யின் விலைகளை உடனடியாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

உயிர்காக்கும் நோய் எதிர்ப்பாற்றல் மருந்து, நீரிழிவு மருந்துகள், மற்றும் உபகரணங்கள், தொண்டை நோய்கள் மருந்துகள், ஆஸ்துமா மற்றும் சுவாச பிரச்சனைகளுக்கான மருந்துகள், வலி ​​நிவாரணிகள், நாளம் தொடர்பான நோய்கள் மற்றும் விலையுயர்ந்த 10 புற்றுநோய் மருந்து வகைகளின் விலைகளை குறைப்பதற்கு இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அமைச்சர் ராஜித தெரிவித்துள்ளார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம், 48 அத்தியவசிய மருந்துகளின் விலைகள் குறைக்கப்பட்டதோடு, அதில் வெவ்வேறு வர்த்தக பெயர்களைக் கொண்ட 272 மருந்துகளின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.