விடுதலைப் புலிகளின் பேச்சால் விஜயகலாவுக்கு ஆபத்தா?

முன்னாள் ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் சர்ச்சைக்குரிய பேச்சு தொடர்பில் விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

விடுதலைப் புலிகள் மீண்டும் வர வேண்டும் என்று கடந்த மாதம் யாழ்ப்பாணத்தில் நிகழ்த்திய உரையின் போது விஜயகலா மகேஸ்வரன் குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து அவரது பதவி பறிக்கப்பட்டதுடன், தீவிர விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டன.

இந்த விசாரணைகளே முடிவுக்கு வந்திருப்பதாகவும், சட்டமா அதிபரின் ஆலோசனைக்காக இன்னும் ஓரிரு நாட்களில் அந்த அறிக்கை அனுப்பி வைக்கப்படும் என்றும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் பேரில், சிறப்பு காவல்துறைக் குழுவொன்று, யாழ்ப்பாணத்திலும், கொழும்பிலும் பலரிடம் விசாரணைகளை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like