இன்றைய ராசிபலன் 04-08-2018

மேஷம்: உற்சாகமான நாள். தெய்வ அனுகூலம் உண்டாகும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணைவழி உறவினர்களால் செலவுகள் ஏற்படக்கூடும். பிள்ளைகளின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிப்பதன் காரணமாக மனதில் சோர்வு உண்டாகும். வியாபாரத்தில் விற்பனை எதிர்பார்த்தபடி இருக்காது. அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பு ஏற்படும்.
ரிஷபம்: தேவையான பணம் கையில் இருந்தாலும், திடீர் செலவுகளால் கையிருப்பு கரையும். தாயின் உடல் நலனில் கவனம் தேவை. தாய் மாமன் வழியில் எதிர்பார்த்த காரியம் முடிவதில் தாமதம் ஏற்படும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சிறு சிறு பிரச்னைகள் ஏற்பட்டாலும், அதனால் பாதிப்பு எதுவும் இருக்காது. அலுவலகத்தில் பணிகளில் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும்.
மிதுனம்: காரியங்களில் அனுகூலம் உண்டாகும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக இருக்கும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சியான அனுபவம் உண்டாகும்.
கடகம்: அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். உறவினர்கள் வருகையால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். வெளியூர்ப் பயணம் தவிர்க்கவும். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள்.நண்பர்களின் சந்திப்பும் அதனால் ஆதாயமும் ஏற்படும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். உங்கள் பணிகளில் கூடுதல் கவனம் தேவைப்படும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். பணியாளர்களால் பிரச்னை ஏற்படும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவுகளால் செலவுகள் ஏற்படும்.
சிம்மம்: இன்று எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவேண்டும். மற்றவர்களுடன் வீண் வாக்குவாதம் செய்வதை தவிர்க்கவும். சிலருக்கு கோயில்களுக்குச் சென்று பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். எதிர்பாராத பணவரவுடன் திடீர் செலவுகளும் ஏற்படும். தந்தையுடன் கருத்துவேறுபாடு வரக்கூடும். அலுவலகத்தில் அதிகாரிகள் உங்களை கடிந்து பேசினாலும், பொறுமையுடன் இருப்பது பிற்காலத்துக்கு நல்லது. வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.
கன்னி: மனதில் இனம் தெரியாத சஞ்சலம் ஏற்படக்கூடும். புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். உறவினர்களுடன் பேசும்போது பதற்றம் வேண்டாம். வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும். தாய்வழி உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். சிலருக்கு குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். அலுவலகத்தில் சக ஊழியர்களிடம் உங்கள் பணிகளை ஒப்படைக்கவேண்டாம். வியாபாரத்தில் செலவுகள் அதிகரிக்கும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயணங்களைத் தவிர்க்கவும். கடன்கள் விஷயத்தில் கவனம் தேவை.
துலாம்: இன்று சாதிக்கும் நாளாக அமையும். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். மனதில் தைரியம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக்கொள்வார்கள். அவர்கள் கேட்டதை வாங்கித் தந்து மகிழ்ச்சியடைவீர்கள். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை இன்று கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாகக் கிடைப்பதால் உற்சாகமாக இருப்பீர்கள். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் ஆதாயம் உண்டாகக்கூடும்.
விருச்சிகம்: உற்சாகமான நாள். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். முக்கிய முடிவுகளைத் துணிந்து எடுப்பீர்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும்.அலுவலகத்தில் சக ஊழியர்களால் ஏற்பட்ட அவப்பெயர் நீங்கும். அதிகாரிகள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் இருந்தாலும், திடீர் செலவுகளும் ஏற்படக்கூடும். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் செலவுகள் ஏற்படக்கூடும்.
தனுசு: இன்று எதிலும் பொறுமை அவசியம். உறவினர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்ளவும். புதிய முயற்சி சாதகமாக முடியும். கணவன் – மனைவிக்கிடையே கருத்துவேறுபாடு ஏற்படக் கூடும் என்பதால், ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. வாழ்க்கைத்துணை வழி உறவினர்களிடம் எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கக்கூடும். உணவு விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கவும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போல இருக்கும். மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத வாய்ப்புகள் கிடைக்கும் நாளாக இருக்கும்.
மகரம்: தேவையான பணம் கையில் இருந்தாலும், வீண்செலவுகள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு சிலருக்கு ஏற்படக்கூடும். தாயின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். தாய்மாமன் வகையில் திடீர் செலவுகள் ஏற்படக்கூடும். சிலருக்கு நண்பர்கள் வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிட விற்பனையும் லாபமும் குறைவாகத்தான் கிடைக்கும்.. திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திடீர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும்.
கும்பம்: எதிலும் வெற்றியே ஏற்படும் நாள். மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணையால் எதிர்பாராத பொருள் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு. கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியும் ஆதாயமும் தருவதாக அமையும். உறவினர்கள் வருகையால் வீட்டில் உற்சாகம் ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சக வியாபாரிகள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்த்துவிடுவது நல்லது.
மீனம்: காரியங்களில் அனுகூலம் உண்டாகும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்க நேரிடும். கூடுமானவரை வெளியூர்ப் பயணம் மேற்கொள்வதைத் தவிர்த்துவிடவும். தந்தையின் தேவையை பூர்த்தி செய்வீர்கள். தந்தைவழி உறவுகளால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும், சக ஊழியர்களின் உதவியுடன் உற்சாகமாகச் செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் பணியாளர்கள் ஒத்துழைப்பால் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும்.