இன்றைய ராசிபலன் 05-08-2018

மேஷம்: அதிர்ஷ்டகரமான நாள். புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் தொடங்குவது சாதகமாக முடியும். சகோதர வகையில் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். தாய் வழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடி இருக்கும். மாலையில் உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி ஏற்படக்கூடும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.
ரிஷபம்: அனுகூலமான நாள். புதிய முயற்சிகள் எதுவும் இன்றைக்கு வேண்டாம்.. பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படக்கூடும். தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு சிலருக்கு ஏற்படக்கூடும். வியாபாரத்தில் பிற்பகலுக்கு மேல் பணியாளர்களால் பிரச்னை ஏற்படக்கூடும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அலுவலகப் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தவும்.
மிதுனம்: புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்கள் உதவி கேட்டு வருவார்கள். தாய்மாமன் வழியில் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடவும் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். பணியாளர்களால் பிரச்னை ஏற்படக்கூடும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய் மூலம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும்.
கடகம்: அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். புதிய முயற்சிகள் வெற்றிகரமாக முடியும். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகமும் அவர்களால் ஆதாயமும் கிடைக்கும். நண்பர்களின் சந்திப்பால் மகிழ்ச்சியும் உற்சாகமும் பெறுவீர்கள். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் ஆதாயம் பெறும் வாய்ப்பு உண்டு. ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் செலவுகள் ஏற்படக்கூடும்.
சிம்மம்: இன்று புதிய முயற்சி எதிலும் ஈடுபடவேண்டாம். மற்றவர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக் கூடும் என்பதால், பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். உறவினர்களால் வீட்டில் சிறுசிறு சலசலப்புகள் ஏற்படக்கூடும். பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்கவும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்கள் வழியில் சுபச்செலவு ஏற்படக்கூடும்.
கன்னி: உற்சாகமான நாள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணை உங்கள் முயற்சிக்கு ஆதரவு தருவார். வாழ்க்கைத்துணை வழி உறவுகளிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. மாலையில் குடும்பத்தினருடன் உறவினர் வீட்டு விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். வியாபாரம் வழக்கம்போலவே இருக்கும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்கள் வகையில் ஆதாயம் உண்டாகும்.
துலாம்: இன்று பொறுமையுடன் செயல்படவேண்டிய நாள். எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்கவும் நேரிடும். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளுக்காக பாடுபடவேண்டி இருக்கும். வாழ்க்கைத்துணை உங்கள் பொறுப்புகளைப் பகிர்ந்துகொள்வது ஆறுதலாக இருக்கும். பிள்ளைகள் நீங்கள் சொல்லும் அறிவுரையைக் கேட்டுக்கொள்வார்கள். வியாபாரம் எதிர்பார்த்தபடியே நடக்கும். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன் கொடுப்பது, வாங்குவது இரண்டையும் தவிர்க்கவும்.
விருச்சிகம்: உற்சாகமான நாள். தொட்ட காரியங்கள் வெற்றிகரமாக முடியும். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக்கொள்வார்கள். வாழ்க்கைத்துணை உறவுகளால் எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு இருப்பதுடன், எதிர்பாராத செலவுகளும் ஏற்படக் கூடும். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் சிறு சங்கடங்கள் ஏற்பட்டாலும் பாதிப்பு இருக்காது. கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்க வகையில் அனுகூலம் உண்டாகும்.
தனுசு: உற்சாகமான நாள். குடும்பத்தில் உங்கள் ஆலோசனைக்கு முக்கியத்துவம் கிடைக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். அவர்கள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். ஆனால், முக்கிய முடிவுகள் எடுப்பதில் அவசரம் வேண்டாம். சிலருக்கு குலதெய்வ பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டாகும். வியாபாரத்தில் பணியாளர்களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்கவும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும்.
மகரம்: அனுகூலமான நாள். தாயின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள். இளைய சகோதர வகையில் செலவுகள் ஏற்படக்கூடும். மற்றவர்களுடன் வாக்குவாதம் செய்வதைத் தவிர்க்கவும். உறவினர் களால் சில சங்கடங்கள் ஏற்படும். பொறுமையாக இருப்பது அவசியம். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். பங்குதாரர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளியூரில் இருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கும்.
கும்பம்: இன்று அனைத்து விஷயங்களிலும் பொறுமை மிகவும் அவசியம். புதிய முயற்சிகளையும், பயணங்களையும் கண்டிப்பாகத் தவிர்க்கவும். உங்களைப் பற்றி மற்றவர்கள் அவதூறாகப் பேசினாலும், பொறுமையுடன் இருப்பது அவசியம். கணவன் – மனைக்கிடையே சிறிய அளவில் கருத்துவேறுபாடு ஏற்படக்கூடும். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் பிரச்னை ஏற்படக்கூடும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி ஏற்படக்கூடும்.
மீனம்: புதிய ஆடை, ஆபரணங்களை வாங்கும் யோகம் உண்டாகும். உறவினர்கள் வருகையால் வீட்டில் கலகலப்பான சூழ்நிலை ஏற்படும். புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். தாயின் தேவையைப் பூர்த்தி செய்வீர்கள். வாழ்க்கைத்துணை உங்கள் முயற்சிக்கு ஆதரவு தருவார். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தையின் மூலம் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.