யாழின் ஒரு கோயிலுக்குப் பின்னால் இப்படி ஒரு நிலை

சண்­டி­லிப்­பாய் சீரணி நாக­பூ­சணி அம்­பாள் ஆல­யத்­துக்­குப் பின்­பாக, முன்னாள் ஆதீன கர்த்­தா­வின் சட­லத்­தைப் புதைப்­ப­தற்கு மேற்­கொள்­ளப்­பட்ட முயற்சி தடுத்து நிறுத்­தப்­பட்­டுள்ளது.

ஆதீன கர்த்­தா­வாக இருந்த தம்­பையா பரஞ்­சோதி கடந்த வியா­ழக்­கி­ழமை உயி­ரி­ழந்­தார். அவ­ரது சட­லத்தை ஆல­யத்­துக்­குப் பின்­பாக புதைப்­ப­தற்கு நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந்­தது.

குடி­ம­னை­கள் அந்­தப் பகு­தி­யில் உள்­ளது. ஆல­யப் பூச­க­ரின் வீடும் அரு­கில் உள்­ளது. இவ்­வா­றான இடத்­தில் சட­லத்­தைப் புதைப்­பது பொருத்­த­மற்­ற­தாக இருக்­கும் என்று ஊர்­மக்­கள் வலி.தென்­மேற்குப் பிர­தேச சபைக்கு முறைப்­பாடு தெரி­வித்­துள்­ளார்­கள்.

மானிப்­பாய் பொலி­ஸா­ருக்கு பிர­தேச சபை­யி­னால் தக­வல் வழங்­கப்­பட்­டது. பொலி­ஸார் நேற்று நேரில் சென்று விசா­ர­ணை­களை நடத்­தி­னார்­கள். ஆல­யத்­துக்­குப் பின்­பாக சட­லத்தைப் புதைப்­ப­தற்கு தடை விதிக்­கப்­பட்­டது.

பொலி­ஸார் நீதி­மன்­றுக்கு விட­யத்­தைப் பாரப்­ப­டுத்­தி­யுள்­ளார்­கள். இன்று காலை இது தொடர்­பில் விசா­ரணை இடம்­பெ­றும் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.