வவுனியாவில் விபத்து- இருவர் காயம்!!!

வவுனியா வைரவபுளியங்குளம் புகையிரத நிலைய வீதியில் இன்று மதியம் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்ததுடன் மற்றொருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.

வவுனியா குருமன்காடு பகுதியில் இருந்து வைரவபுளியங்குளம் நோக்கி வந்த மோட்டார் சைக்கிளும், நகரிலிருந்து குருமன் காடு நோக்கி சென்ற சொகுசு காரும் விபத்திற்குள்ளானது. அதில் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரும் தூக்கி வீசப்பட்டனர். அவர்கள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Get real time updates directly on you device, subscribe now.