கல்முனை இஸ்லாமிய இளம் வயது பெண் ஆசிரியர் மரணம்: நடந்தது என்ன?

மரணத்தின் பின்னனியில் அல்சர் எனும் நோய்.. ஆரம்பத்தில் குடல் புண் பின்னர் ஓட்டையாகி வாழ வேண்டிய வயதில் நேற்று இயற்கை எய்தினார்.

கல்முனை, சம்மாந்துறை, அக்கரைப்பற்று கல்வி வலயத்திற்குட்பட்ட

இந்த இளம் ஆசிரியை அதிகாலை 4.30 மணிக்கு எழுந்து படபடவென ஆயத்தமாகி ஏறாவூர் பாடசாலைக்கு தினமும் சென்று பின்னர் அங்கிருந்து 2.00 Pm புறப்பட்டு 4.00 மணிக்கு வீடு வந்து சமைப்பவராகவும் சாப்பிடுபவராகவும் இருந்தார். ஒரு நாள் அல்ல, ஒரு மாதம் அல்ல, 5 வருடங்கள்..

இதுதான் இவருடைய மரணத்துக்கு பின்னால் இருந்த பிரதான காரணி. காலை உணவும் பகல் உணவும் 5 வருடங்கள் நிர்ப்பந்த சூழ்நிலைக்குள்ளே….

இன்று பல இளம் ஆசிரியர்கள் வெளிமாவட்டங்ளுக்கு கண்மூடித்தனமாக எறியப்பட்டு நிபந்தனை காலங்கள் பூர்த்தி அடைந்தும் இது போன்ற பல பிரச்சினைகளுடன் சித்திரவதைக்குள்ளாகியுள்ளனர்.

மாகாண கல்விப் பணிப்பாளர்கள் எரியும் நெருப்பில் பெற்றோல் ஊற்றுபவராகவே தொழிற்படுகிறார்கள்

ஒவ்வொரு புதன் கிழமையும் ஆசிரியர்கள் திருகோணமலை அலுவலகத்துக்கு இவ்வாறான நோய்களோடும், குழந்தை பிரச்சனை , பொருளாதார பிரச்சினைகளோடும் முறையிட சென்றனர் எதற்கும் செவிசாய்க்காத வரம்பற்ற அதிகாரத்தை கொண்ட ஹிட்லர் போன்றே பதில்களை வழங்குகி வருகின்றனர்

பிரதிநிதிகளே அதிகாரிகளே இவ்வாறான இக்கட்டான சூழ்நிலைக்குள் பரிதவிக்கும் ஆசிரியர்களை பசி பட்டினி இல்லாமல் உரிய வேளைக்கு மனைவி பிள்ளைகளோடு சேர்ந்து சாப்பிடுவதற்கும், நோய்

நொடியற்று வாழ்வதற்கும் இதுபோன்ற இன்னுமொரு மரணம் ஏற்படாமல் இருப்பதற்கும் உங்கள் குரல் சட்டசபை வரை ஓங்க வேண்டும். இதற்கு என்றும் நன்றியுடையவர்களாக எமது மக்கள் மாறுவார்கள் என்பதில் ஐயமில்லை.