கோத்தா – பசிலிற்கு ஆப்பு……

ஜனாதிபதி தேர்தலில், கோத்தாபய ராஜபக்ஸவினை வேட்பாளராக களமிறக்கினால் அனைவரினது ஆதரவினையும் பெறுவது கடினமாக இருப்பதோடு மத்தியதர மற்றும் சிறுபான்மை மக்களின் வாக்குகளை பெறுவதும் இலகுவாக இருக்காது.

பசில் ராஜபக்ஸவை களமிறக்கினால் ஏனையவர்கள் எதனையும் செய்ய முடியாது. அனைத்தையும் அவரே செய்து முடித்துவிடுவார்.

ஆகவே இதற்கு ஜனாதிபதி வேட்பாளருக்கு பொருத்தமானவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் பாரியார் சிராந்தி ராஜபக்ஸவே.

அவரைக் களமிறக்கினால் அனைவரினது ஆதரவையும் பெறமுடியும் என போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா ஆலோசனை கூறியதாக தெரிவி்கப்படுகிறது.

முன்னாள் ஜனாதிபதியின் மூத்த புதல்வரும், அம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஸ போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுக்கு தனிப்பட்ட விடயமொன்றுக்காக தொலைபேசி அழைப்பொன்றை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதன்பொது தனிப்பட்ட விடயம் சம்பந்தமான பேச்சுக்கள் நிறைவடைந்ததையடுத்து எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கூட்டு எதிர்க்கட்சி சார்பான வேட்பாளர் தொடர்பான பேச்சுக்கள் நிகழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அந்த தருணத்திலேயே அமைச்சர் நிமல், இந்த விடயம் குறித்து தனது ஆலோசனையை தெரிவித்துள்ளாதர்.

எனினும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ இந்த விடயம் சம்பந்தமாக எந்தவிதமான பதிலையும் கூறாமல், அது தொடர்பில் கரிசனை கொள்வதாக குறிப்பட்டார் என தகவல்கள் வெளியாகி உள்ளன