ஆரம்பமாகும் நல்லூர் ஆலய மகோற்சவம்! அதிரடியாக களமிறங்கும் 500 பொலிஸ் அதிகாரிகள்

நல்லூர் ஆலய மகோற்சவத்தை முன்னிட்டு 500 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாண மாவட்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் இதனை தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் நேற்று இடம்பெற்ற சிவில் பாதுகாப்புக்கு குழுக் கூடடத்திலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.அவர் அங்கு தெரிவித்ததாவது,

நல்லூர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் 16 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

நல்லூர் ஆலயத்துக்கு வருடாவருடம் இலட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம்.இதற்காக இம்முறையும் 500 பொலிஸார் பாதுகாப்பு கடமைக்கு ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

கண்டியில் பெரேரா பெருநாளுக்காக வடக்கு மாகாண ரீதியில் 100 பொலிஸாரை அனுப்பி வைக்குமாறு எமக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

எனினும் நாம் நல்லூர் ஆலய மகோற்சவ பாதுகாப்புக்குப் பொலிஸார் தேவையென கூறி கண்டிக்கு அனுப்பாது இங்கு பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்துள்ளோம் என்றார்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like