இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட பொக்கிஷம்!

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் பெறுமதியான கதிரியக்க கனிமங்கள் உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதற்கான புவியியல் தரவு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதற்கமைய கதிரியக்க கனிமங்கள் உள்ள பிரதேசங்கள் சில அடையாளம் காணப்பட்டுள்ளன.

அவ்வாறு அடையாளம் காணப்பட்ட இடங்கள் தொடர்பில் மேலதிக ஆய்வுகளை மேற்கொள்வதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகத்தின் சிரேஷ்ட இயக்குனர் உதய டி சில்வா தெரிவித்துள்ளார்.

அதற்கமைய பேருவளை, களுத்துறை, எல்பிட்டிய, மாத்தளை, தம்புள்ளை, பல்லேகல, ஹங்குரங்கெத்த, கண்டி, பல்முடுவ போன்ற பிரதேசங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு புல்மூட்டை, மாத்தளை, களுத்துறை, பேருவளை, எல்பிட்டிய, பல்லேகம, தம்புள்ளை ஆகிய பிரதேசங்களில் மிகவும் பெறுமதியான கதிரியக்க கனிமங்கள் கிடைத்துள்ளன.

நாடு முழுவதும் 21 கனிம வளங்கள் தொடர்பில் வரைப்படம் தயாரிப்பதற்கு புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் கதிரியக்க கனிய எல்லை தொடர்பில் தீர்மானம் மேற்கொண்டு, அதன் மூலம் கிடைக்கும் பொருளாதார நன்மைகளை பெற்றுக்கொள்ளவுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் சிரேஷ்ட இயக்குனர் உதய டி சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like